Skip to main content

Posts

Showing posts with the label women in train

ரயில் பயணங்களில் 4....

     ஒதுங்குவதும் ஒடுங்குவதும் பெண்ணின் தன்மை அல்ல... பயணங்களின் போது பெண்கள் சந்திக்கும் அதிகமான பிரச்சனைகள் உடன் பயணிக்கும் ஆண்களிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதில்லை. மிதமிஞ்சிய பொறுமையும் கூட பெண்களுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கும் என்பதை உணர வேண்டும். ஆண்கள் அனைவரும் உத்தமர்கள் என்று கொள்ளவும் முடியாது. தப்பானவர்கள் என முடிவு பண்ணவும் முடியாது.   ரயில் பயணங்களின் போது, என் இருக்கையின் அருகில் அமரும் நபர்களை சார்ட்டில் பார்த்துவிட்டுதான் உள்ளே செல்வது என்  வழக்கம். நேற்றைய பயணத்தின் போதும் அப்படித்தான். அருகே 81 வயது மூதாட்டி ஒருவரின் பெயர் பார்த்தேன். அவர் எங்கேயிருந்து பயணிக்கத் தொடங்குகிறார் என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். ஏறி அமர்ந்தேன். அருகில் இருக்கை காலியாகவே இருந்தது அரை மணிநேரம் சென்றிருக்கும். நான்கு கரைவேட்டிக்காரர்கள் வந்தார்கள். என்னருகே ஒருவரும் அருகே மூன்று பேர் அமரும் இருக்கையில் மற்றவர்களும் அமர்ந்துக் கொண்டார்கள். மற்றுமொரு ஐந்து நிமிடத்தில் இன்னும் இரு தொண்டர்கள் அவர்கள் அருகில் வந்து நின்று கொண்டார்கள். சில நிமிடங்கள் சென்றிருக்கும் முன

ரயில் பயணங்களில் 3....

அருகில் ஆண்கள்... என் பயணங்கள் பெரும்பாலும் ரயிலில்தான். அதனால் அவை எனக்கு மிகவும் பிடித்தவைகளாகிப் போனது.  ரயில் பயணங்களின் போது விதம் விதமான பெண்களை சந்திக்கிற சந்தர்ப்பங்களும் கிடைக்கிறது....பாவம் என்கிட்டே வந்து அவங்களா மாட்டுறாங்க.... நான் முதல்ல பேசாமதான் இருப்பேன். பக்கத்துல உட்கார்ந்துகிட்டு 'வேலைக்கு போறீங்களா...' என்று ஆரம்பிப்பாங்க...'ம்ம்ம்...' என்று சொல்லிவிட்டு என்பாட்டுக்கு காதில் earphone மாட்டிக் கொண்டு உட்கார்ந்துவிடுவேன் ஒரு ஆங்கில நாவலுடன். அதைத்தான் யாரும் கடன் கேட்கமாட்டார்கள். ஒரு முறை பயணத்தின் போது என்னருகில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஆரம்பம் முதல் சென்னை வந்து சேரும் வரை அவரின் மூட்டு வலியே என் காதுவலி ஆகிப்போனது....ஒரு தைலம் எடுத்து தடவிவிட்டு அதற்கான காரணத்தை ஒரு அரை மணி நேரம் விளக்கியிருப்பார்... இன்னொரு முறை ஒரு பெண்மணி என்னை இடம் மாறி அமரச் சொன்னார். எதற்கு என்ற என் கேள்விக்கு,  அவரின் பதில் இதுதான்.... ஒரு ஆணின் அருகில்  அமரமாட்டாராம் அதுவுமில்லாமல் தன் கணவரின் அருகில் தான் அமரவேண்டுமாம் பயணம் முழு