எதிர் கதவின் பின் புன்னகையை செலவு செய்ய காசு கேட்கும் மனிதர்கள்தான்... பக்கமாய் பார்த்தால் பாந்தமாய் பேசுவதாக பாவனைகள் செய்வார்கள்... நம் அகம் புகுந்து அழகாய் நோட்டமிடும் ஆந்தை கண்கள்... அமர்த்தலாய் வந்தமர்ந்து காபியை நிராகரித்து டீ கேட்கும் அமர்க்களம்... அக்கம்பக்கம் பற்றி புறம் சொல்லி தினத்தந்தியை தலைகீழாய் ஒப்பிக்கும் திறமை... தன் வீட்டில் வைக்காத சாம்பாரை மேல் வீட்டில் இருந்து வாங்கி தன் கணவனுக்கே பரிமாறுகிற சாதுர்யம்... நடிப்பாய் இருக்கும் நட்பு பூக்கள்தான் – ஆயினும் என் உதட்டோர சிரிப்புக்கு சொந்தக்காரர்கள்... இவர்கள்தான் அடுக்கடுக்காய் தெரியும் ஜன்னல் வழி உலகங்கள்...