கடந்த வாரத்தில் ஒரு நாள் நண்பரின் இல்லத் திருமணத்திற்காக நாமக்கல் செல்லவேண்டியதாயிற்று. ஊருக்குள் நுழையும் போதே அந்த மலையும் அதன் மேல் கம்பீரமாய் இருந்த கோட்டையும் கண்ணில்பட்டது. எப்படியும் அதை பார்த்து வருவதென முடிவு செய்தேன். அந்த கோட்டைக்கு செல்லும் வழியை விசாரிக்கப் போனால், 'அங்கே ஒண்ணும் இல்லைங்க. சும்மா ஒரு இடிந்த சுவருதான் இருக்கு. ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில்தான். அதுக்கு போங்க...' என்று பொதுவாய் அநேகம் பேர் கூறினார்கள். நமக்குதான் அந்த வாசமே இல்லையே. வரலாற்றின் மீது மட்டும் எப்போதும் எனக்கு ஒரு பிரியமும் அதன் வழிதானே நாமும் வந்தோம் என்கிற நினைவும் உண்டு. அந்த மலை கோட்டைக்கு செல்ல படிகளும் அதையொட்டி பிடிப்புக் கம்பியும் போடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதியும் உள்ளது. வரலாறு : அனுமான் இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது கமலாலயம் குளத்தினருகில் இறக்கிவைத்த விஷ்ணுவின் உருவமிட்ட சாலிகிராமம் என்னும் கல், அனுமான் ஸ்தானம் முடித்து வரும்போது நாமகிரி மலையாய் உருவெடுத்ததாக வரலாறு. அதன் பிறகு இரணிய வதம் முடித்த ந