போராட்ட களம்.. கேரள மாநிலத்தின் மூணாறு தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகள் 2015 யில் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். அந்த காலகட்டத்தில் அவர்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்களின் ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு குறித்தும் கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணி மிகவும் மோசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர் அந்த பெண்கள். அவர் அரசு அதிகாரிகள் மீதே ஒழுக்கம் சார்ந்த குற்றம் சுமற்றியதாகவும். ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு போராட்டம் நடந்த காலகட்டத்திலும் இம்மாதிரியான ஒழுக்க சீர்கேடான விஷயங்கள் நடந்ததாக மட்டுமே அமைச்சர் கூறியதாகவும் அவரின் மலையாள பேச்சின் தமிழாக்கம் சுட்டுகிறது. https://thetimestamil.com/2017/04/24/கேரள-அமைச்சர்-தமிழ்-பெண்/ கேரளா, கம்யூனிசம் பேசும் குதர்க்கவாதிகளை (Critical Thinkers(!) என்றும் சொல்லலாம்) கொண்ட பிரதேசம். இந்த கம்யூனிசம் என்பது பொதுவியலை பேசும் ஓர் அமைப்பு. கம்யூனிஸத்தில் புழங்கிவரும் ‘தோழமை’, ஆண் பெண் என்னும் பா