என் சம்மதம் இல்லாமலே என்னை உனக்குள் கொண்டு சென்றாய் ஏன் என்று கேட்க எனக்கு அதிகாரம் மறுக்கிறாய் உன்னுள் இருப்பது நானில்லையா இல்லை என்னின் உன் உருவமா? என் வார்த்தையை உன் வாக்கியமாக்கிக் கொள்கிறாய் என் சொல்லை உன் முற்றுப்புள்ளியாக்கிக் கொள்கிறாய் என்னை விடுத்து வேறு உலகம் பார் என்றால் மேலுலகமா என்கிறாய்.... என் முடிவை உன் முடிவாக்கி கொள்கிறாய் நான்தான் உன் முடிவென்று நீ கொள்வதால் என் உயிர் உனக்கு என்கிறாய் எனக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம் என்கிறாய் உன்னை கொன்று உணவாக்கிக் கொள்ள நான் பூலான்தேவி அல்ல உன்னையும் உன் காதலையும் ஒருசேர என்னால் உதறமுடியும் என்னுள் நீ பூஜ்யமாய் இருப்பதால் இன்னும் ஒரு அவகாசம் கேட்கிறாய் என்னை நீ மறப்பதற்கு அல்ல உன்னை நான் நினைப்பதற்கு... முடியாது என்ற என் மறுப்பை கேட்க மறுக்கிறாய் உனக்கு மறுப்பு சொல்ல வைத்து என் பாவத்தின் எண்ணிக்கையை கூட்டிவிட்டாயே... நீ நாளை மாறலாம் உன்னை தூக்கியெறிந்த என் மனசாட்சி என் கடைசி விறகு எரியும் வரை உறுத்துமே.... என் செய்வேன