Skip to main content

Posts

Showing posts with the label பெண் குழந்தை

அனாதை என்கிற அடையாளம்

அம்மா தந்தது.... வேர்கள் ஆழமாய் இருந்தும் கிளைகள் பல இருந்தும் நீ செய்த சிறு காதல் கிறுக்கலில் நீங்கள் இருவரும் பகிர்ந்த வாழ்க்கையை எனக்கு கொடுக்காமல் உன் பெயரும் சொல்லாமல் தகப்பன் இவனேன்றும் சுட்டாமல் தெருவின் விளிம்பில் பெண் பிள்ளையாயிற்றே என்கிற சிறு ஆதங்கம் கூட இல்லாமல் என்னை விட்டுச் சென்றாயே அனாதை என்கிற அடையாளத்துடன்.... உறங்கினால் எழுப்பவும் உணவை வாய் நிறைய கொடுக்கவும் விதம் விதமாய் உடை உடுத்தி  என்னை அழகு பார்க்கவும்  என் முகசாயலை  உறவுகளில் பொருத்திப் பார்க்கவும்  எனக்கான பொருட்களை எனக்கேயென்று சேர்த்து வைக்கவும்     உன் சிறு அதட்டலில் என்னை பெண்ணென்று   எனக்கே புரிய வைக்கவும்  உன்னை தேடுகிறேன்  என்றாவது  அனாதை என்கிற சொல்லை   நீ கடக்க நேரிட்டால்  என்னை பற்றிய நினைப்பு உன்னை கடக்குமென்ற  எதிர்பார்ப்பில்......

பெண்களாகிய...

நாங்கள்…. நம் நாட்டில் வாழும் பெண்களில் பலர் மனதில் இருக்கும் பல விஷயங்களை யாரிடமும்  பகிர்ந்து கொள்வதில்லை. ஆண் வர்க்கம் செய்யும் வக்கிரமான சில செயல்களை வெளியே பெண்களால் சொல்லமுடிவதில்லை. படிக்கும் போது கூட பெண்கள் தங்களுக்கு நடக்கும் சில அநியாயங்களை  வெளிபடையாக தோழிகளிடமும் சகோதரிகளிடமும்   பேச முடிகிறது. திருமணம் ஆகிவிட்டால் மனம் விட்டு பேசுவது நின்று போய்விடுகிறது. யாரையும் (கணவரையும் சேர்த்துதான் ) நம்பி சொல்லமுடியாது.  பெண்களின் மனது ஓர் ஆழ்கிணறு.  என்ன  துன்பத்தை அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆண்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அந்த வர்க்கத்தில் பல பேருக்கு மென்மையான, மனதை பாதிக்ககூடிய சின்ன சின்ன சமாச்சராங்களை  புரிந்து கொள்ள முடியாது. வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தாலே போதும், தெருவில் நடப்பவர்கள் உரசுவதும், பேருந்தில் அல்லது ரயிலில் அவர்கள் கைகள் பெண்களில் மேல் மேய்வதும், சுரங்க பாதையில் ஒரு கண நேரத்தில் என்ன நடக்கும் என்று வெளியே சொல்லவே முடியாத சில விஷமங்களும், பெண்கள் அனுபவித்து  கொண்டுதான்  இருக்கிறார்கள்.