நம்ம ஊரில இருக்கிற கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் கொஞ்சம் போனீங்கன்னா தெரியும், தினமும் வேலைக்கு போய்வருகிற அலுவலகத்தை ( அந்த ஆபிஸ் இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடிதான் நம்ம வரிப்பணத்தில கட்டினதா இருக்கும் ) எப்படி கேவலமாக வைத்திருப்பது, உட்கார்ந்திருக்கிற நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு மலை மாதிரி குவியலா, குப்பை மாதிரி பைல்களை எப்படி சேர்த்து வைக்கிறது, கரண்ட் போச்சுனா அதுலேருந்து ஒன்றை உருவி எப்படி விசிறியா பயன்படுத்திறது, வேலையே பார்க்காம, customer வந்ததைக் கூட கவனிக்காம எப்படி ஆபீசுக்குள்ளேயே சுத்துறது அப்படின்னு எல்லாம் நமக்கு சொல்லிக் கொடுப்பாங்க... நம்ம ஊரு BSNL ஆபீசுக்கு போகிற நிலைமை எனக்கு வந்துச்சு....என்னன்னா....நான் ஒரு புது செல் வாங்கி அதுல என்னோட BSNL சிம் கார்டு ஒண்ணை போட்டேன். அதுக்கு இந்த GPRS, WAP, MMS.....இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் சேர்க்க வேண்டுமே. நானே நெட்லே இருந்து செட்டிங்க்ஸ் எல்லாம் சேர்த்துவிட்டேன். ( http://forumz.in/174-cellone-excel-gprs-edge-settings-all-major-handsets/ ). வேலை முடிஞ்சுதுன்னு பார்த்தா, மெயில் update ஆகுது ஆனா நெட் மட்டும் வேலை