காலம் விரயமாகிறது காற்று சத்தமடங்கி படுத்திருக்கிறது உயிர் விலக்குவதான குற்றச்சாற்றுடன் உச்சியின் விளிம்பில் நிற்கிறாய் வெகு நேரமாய் உயிரை பிரிக்க தென்றலாக, புயலாக எதுவாகவும் காற்று, உன்னருகிலில்லை உன் பாதங்களில், நீயறியாமல், உச்சியிலிருக்கும் உன் சுவடுகளை பள்ளத்தாக்கிற்கு கொண்டு செல்ல ஆக்கினை சக்கரம் முனைப்பாய் நிற்கிறது அதன் வழி, உன் தேகத்தை காற்று சுமக்கும்முன் கனத்திருக்கும் நெஞ்சத்திற்கு பெரும் சுவாசம் கிடைக்கக்கூடும் பாதி தொலைவில் அதை பற்றிக்கொண்டு மேலெழும்ப விழைவதாய் பெரும் ஒலியெழுப்புகிறாய் பள்ளத்தாக்கில் இருப்பவர்கள் அதை எதிரொலியென குழந்தைகளுக்கு சொல்லி மகிழ்கிறார்கள்..