Skip to main content

Posts

Showing posts from July 26, 2015

பாகுபலி - விமர்சனம் - Bahubali

பாகுபலி பாகுபலி , இந்த படத்தை நான் இரண்டு முறை பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.  முதல் முறை சென்னை PVR பிவிஆர் ஸ்க்ரீன்லே. அடுத்த முறை, கோவையில் கங்கா தியேட்டரில். ஒன்று, படத்தை படம் எடுக்கப்பட்ட எபக்ட்டோடவே காண்பித்தது. மற்றொன்று, படத்தை சாதாரணமாக்கி காண்பித்தது. இது சம்பந்தமாக கடைசியில் அலசலாம். கங்கா தியேட்டரில், moviebuzz விளம்பரம் வழியே, படம் போடும் முன்பே ராஜமௌலி வந்து, இது முதல் பாகம், இரண்டாம் பாகம் விரைவில் வரும்ன்னு சொல்லிட்டாங்க. ஓகே.. இனி கதைக்குள் போவோம்.. Director RajaMouli   Bahubali, The Begining முதல் களம் படம் தொடங்கியதுமே, மலையடிவாரம். அதில் முழுக்க முழுக்க ஜிவ்வுன்னு தண்ணீர், அருவியாய் கொட்டுது. எங்கே பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர்...நாமளே தண்ணிக்குள்ளே இருக்கிற மாதிரி குளிர்ச்சியாக ஒரு உணர்வு. பிவிஆர் தியேட்டரில் பின் சீட்டு சிறுவன், ‘இந்த இடம் எங்கேம்மா இருக்குன்னு கேட்டு அவங்க அம்மாவை தொல்லை பண்ணிக்கிட்டு இருந்தான். அருமையான படப்பிடிப்பு...சாபு சிரில், மனு ஜகத், செந்தில்குமார் மட்டுமல்லாமல்