சூரியக்கதிர் இதழில் வெளிவந்த என் சிறுகதை புதன் கிழமை வந்துவிட்டாலே அப்புவுக்கு ஞாயிற்றுகிழமையின் வாசம் மனதுக்குள் எட்டிப் பார்த்துவிடும். நாலு நாளாய் எண்ணிகிட்டு இருந்தான். அன்று விடிந்ததும் அம்மாவின் கல்லு இட்லியை சமத்தாக சாப்பிட்டான். சட்டையை மாட்டினான். அம்மா இவனை ஒரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ‘என்ன துரை எங்கே கிளம்பிடீங்க...’ என்றாள். மலங்க விழித்தான் அப்பு. புரிந்து போனது அவளுக்கு. ‘போ....அந்த கிழவிகிட்டே வாரம் ஒருநா திட்டு வாங்காட்டி உனக்கு இன்னைக்கு பொழுது கழியாது. கண்ணு தெரியாதவ. யாருமில்லாதவ. துணைக்கு நாமதானே பக்கத்துல இருக்கோம். நல்லது கெட்டதுக்கு நான்தானே ஓடணும். அதுவும் கொள்ளுபேரன்னு நீ ஒருத்தந்தானே இருக்கே...அந்த நெனப்பு கிழவிக்கு இருந்தாதானே...போன மாசம்தானே உன்னை முருங்கை குச்சியை வச்சி அடிச்சா. வலி விட்டுபோனா இப்படிதான் போவே...போ..’ என்று ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சின்ன பாட்டிதான் அந்த கிழவி. ஆனாலும் பாசமற்றவள் என்பது இவளின் நெனப்பு. அப்பு ரோட்டைத் தொட்டான். படகுகார் ஒன்று சர்ரென்று அவனைத் தாண்டியது. புழுதி முகத்