Skip to main content

Posts

Showing posts from September 7, 2014

பறப்பதை பிரயத்தனப்பட்டு செய்கிறது அந்த காக்கை..

பறப்பதை பிரயத்தனப்பட்டு செய்கிறது அந்த காக்கை . மெதுவே மேலேழும்பி  பருந்தாய் சிறகு நீட்டி பறக்கிறது . காற்றின் சுழலில் சிக்கி தடுமாற்றத்தில் மண் புகாமலிருக்க சிறகடிக்க கற்றுக் கொள்கிறது . அசைவின் போதே கூட்டின் தொலைவு அயர்ச்சியை உண்டாக்குகிறது . காற்று சற்று கண்ணயரும் நேரம் கடுகாகிறது அது . நெருங்கிய மரத்தின் உச்சிக் கொம்பில் அமர்ந்து உரக்க அழைக்கிறது உறவுகளை  பறப்பது பெரிய விந்தையல்ல என்பதாய்.. 

அன்னபட்சி - நூல் மதிப்புரை

அன்னபட்சி    நூல் : அன்னபட்சி ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன் அகநாழிகை பதிப்பகம் ஜனவரி 2014 (கோவை இலக்கிய சந்திப்பில்  31 ஆகஸ்ட் 2014  என்னால் மதிப்புரை வழங்கப்பட்டது..) தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.   தேனம்மை அவர்கள்   இந்த கவிதை தொகுப்பின் தலைப்பு ' அன்னபட்சி ' மிக அருமையானது. தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி, ‘ உன் அல்லதை எல்லாம் நல்லதாக்கி அருந்தும் அன்னபட்சி நான் ’ ன்னு எழுதியிருக்காங்க கவிதையில். இது மிகவும் வித்தியாசமான சிந்தனை. மற்றவர்களின் நல்லவை அல்லாதவற்றைக் கூட நல்லதாக்கிப் பார்க்கும் அவரின் இந்த குணம் நம்மை வியக்க வைக்கிறது. கோவை இலக்கிய சந்திப்பில் என்னுரை  இனி, கவிதைகளைப் பார்ப்போம்.. இந்த நூலின்