நேற்றைய தினம் எங்கள் வீட்டிற்கு ஏசி சர்வீஸ் பண்ண இளைஞன் (பொறியியல் படித்தவன்) ஒருவன் வந்தான். எங்கள் வீட்டின் அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்தான். அதிசயித்துப் போய் ஒரு கேள்வி கேட்டான். 'இவ்வளவு புத்தங்கங்களை சார் படிச்சிருக்காங்களா?' என்று. இந்த கேள்விதான் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இதைவிட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு வேறு எதிலும் காணமுடியாது. ஆண் என்பவன் மட்டும்தான் ஆழ்ந்து படிப்பவன் என்று யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது? இத்தனை நூல்களையும் அந்த வீட்டின் பெண் படித்திருக்கக் கூடாதா என்ன? எப்பொழுதுமே பெண் முட்டாளாகவே இருப்பாள் என்று இந்த இளைஞனுக்கு கற்றுக் கொடுத்தது யார்? அதே போல் என் கணவர் மாற்றலாகி போகும் ஊர்களுக்கு செல்லும் போது அவரின் கீழ் பணிபுரிபவர்கள் என்னிடம் முதலில் கேட்கும் கேள்வி, 'இங்கே இந்த கோவில் பிரசித்தம். அந்த கோவில் பிரசித்தம். கோவிலுக்குப் போகலாமா? ...' என்பதே. பெண் என்றால் படிக்கும் திறனற்றவளாகவும் கோவில் மட்டுமே அறிந்திருப்பவளாகவும் காலம் காலமாக நினைக்கும் ஆண்களின் குறுகிய கண்ணோட்ட