சில இதயங்களின் உள்ளே பூட்டப்படும் சில காரணங்கள் இன்னதென்று இல்லாமல் நாளாய் அதற்குள்ளேயே வதைப்படும் சொல்லமுடியா வாதனைக்கு பின் அவை வடிக்காலற்றுப் போகும்... நிரம்பி வழியும் நீரின் பொங்கும் பிரவாகமாய் அவை அமையக்கூடும்... யாரொருவர் அந்த பிரவாகத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்களோ அவர்கள் காரணங்கள் ஏதுமின்றியே மரித்துப் போகக்கூடும்... இதற்கும் சலனமற்று போயிருக்கும் அந்த இதயம்... அதனுள் அந்த காரணிகளும் கூட அசையாதிருக்கும்... அழுகலான இவ்வாறான இதயங்கள் இரக்கமின்றி வதைத்துக் கொண்டேயிருக்கும் மற்றவற்றை... ஒதுங்கல்கள் ஏதுமின்றி காட்டாறாய் ஒழுக்கமற்றுப் போயிருக்கும்.... மனக் கோளாறு என்று மருத்துவம் பட்டமிடும் மாற்று மருந்து கூட கிடைக்கப் பெறும் இதற்கு முன் மரித்துப் போன இதயங்களுக்கு காரணிகளை மட்டுமே காரணமாக்கிவிட்டு அந்த இதயம் புதிதாய் பிறந்திருக்கும்....