ஆவணப்படம்... கடந்த ஞாயிறு மாலை என் தோழி கீதா இளங்கோவன் அவர்களின் 'மாதவிடாய்' என்னும் ஆவணப்படம் கோவையில் திரையிடப்பட்டது. அன்று அது சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பெண்பிள்ளைகளின் மாதவிடாய் சிரமங்கள் குறித்த குறும்படம் இது. மிகவும் அருமையாய் எடுக்கப்பட்ட ஒரு படம். இந்த படத்தை அவரும் அவரின் கணவரும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இது ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் ஆண், பெண் இருபாலாருமே பார்க்கவேண்டிய படம்.. குறிப்பாக பெண்களும் அவர்களின் பெண்குழந்தைகளும் பார்க்க வேண்டியது அவசியம். மாதவிடாய் என்பது என்ன, கிராமப்புறங்களில் அதை எவ்வாறு நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி அந்த பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள், அந்த சமயங்களில் சுகாதாரமாய் இருக்க செய்யவேண்டியவை என்று நிறைய விஷயங்களை இந்த ஆவணப்படம் உள் அடக்கியிருக்கிறது. இத்திரைப்படம் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மாதவிடாய் குறித்த மக்களின் நடைமுறை பிரச்சினையை எடுத்துரைக்கிறது. அங்கு பழக்கத்தில் உள்ள முட்டு வீடு என்னும் ஒரு விஷயமும் கவனத்தில் கொண்டு