Skip to main content

Posts

Showing posts from January 27, 2013

கோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...

கோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா... கோவையை சேர்ந்த  வலைபதிவர்களாகிய அகிலா, சரளா, ஜீவா  ஆகிய  எங்கள் மூவரின்  புத்தக வெளியீட்டு விழா  நடைபெற உள்ளது.  வலைபதிவுலகின் நண்பர்கள் அனைவரும்   வருகை தந்து இந்த விழாவினை  சிறப்பிக்க வேண்டுகிறேன்....  நூல்கள் : அகிலா  -  சின்ன சின்ன சிதறல்கள் கோவை மு சரளா -  மௌனத்தின் இரைச்சல் ஜீவானந்தம் -  கோவை நேரம்  விவரங்கள் : தேதி :    3-2-2013  ஞாயிற்று கிழமை     நேரம் :  மாலை 4 மணி முதல் 6 வரை  இடம்  :  மங்களா இண்டர்நேஷனல்  வரவேற்கிறோம் அனைவரையும்...

மனம் போன போக்கிலே....

கால் போன பாதையில் மனதின் சுமைகள் குறைய    எதிலும் லயிக்காமல் மாலை நேரத்து நடை.... சுண்டக்காமுத்தூர் வளைவு நெருங்கும் போதுதான் நடையின் தூரம் உறுத்தியது.... திரும்பி நடக்கும் போது கண்ணாடி சட்டம் போடும் கடை கண்ணில் பட்டது..... கண்ணாடி ஓவியம் கொடுத்து நாளாகிறது கேட்டால் தேடிக் கொண்டேயிருக்கிறான் மறந்து வைத்த இடத்தை.... அரை மணி நேரம் கழித்து எடுத்து வந்தான் என் ஏசுநாதரை நான் எடுத்து செல்கிறேன் என்ற போது சட்டம் போட்டு காலையில் தருகிறேன் என்று வைத்து கொண்டான்... கண்ணாடியில் ஏசுநாதர் சிலுவையில் தலை குனிந்து முற்கள் குத்திய இடங்களில் இருந்து குருதி நமக்காக பாவசுமையை தாங்கியதாய் வரலாறு... வரும்வழி முழுவதும் நாம் என்ன பாவம் செய்தோம் என்கிற மனக்கணக்கு....      இப்போது அவர் இல்லை நம் பாவம் சுமக்க நம் பாவம் நமக்குதான் என்ற கவலை... இருட்டி வீடு வந்தால் வீட்டு வாசலில் தோழியர் இருவர் சம்பிரதாயத்திற்கு சிரிக்க ஆரம்பித்து சந்தோஷமாய் முடித்து அவர்கள் விடைபெற்ற போது மனம் லேசாகி இருந்தது..... மனம் என்று ஓன்று குரங்காய

கவிதையின் மறுபக்கம்....

உதறவும் முடியாமல்  உள்வாங்கவும் முடியாமல்  ஆரம்பத்தின் முதற்சுழியாய்  முடிவில்லா சுழலாய்  காலை சுற்றுகிறதே இந்த காதல்.... உச்சந்தலை முதல்  உள்ளங்கால் வரை  பாலாங்குழியில் மாறி மாறி  உருளும் குந்துமணியாய்  ஓடிக்கொண்டிருக்கிறதே.... கண் மூடி உலகம் மறப்பேனா.... கண்திறந்து உன்னை பார்ப்பேனா.... என் செய்வேன்..... 'அம்மா.....காய் வேணுமா?'... ம்ம்ம்... சமையலை பார்ப்போம்.... மீதியை மாலை முடிப்போம்.... பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம்....