தத்தி தத்தி என் வீட்டு கம்பியின் மீது நீ
என் அருகாமையை கண்டுக்கொள்ளாமல்...
ஒன்றும் பேசிக்கொள்ளாமலே
வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
இருவருமாய் அந்த பெருஞ்சாலையை...
வாழ்வின் போராட்டத்தை நினைக்கும்
மனவோட்டம் இருவரின் நினைவிலும்
ஊனமான காலுடன் நீயும்
ஊமையான பெண்ணினமாய் நானும்
மௌனங்களை மட்டுமே சுமந்து
வெகு நேரமாய் பார்த்து கொண்டிருக்கிறோம்
அந்த பெருஞ்சாலையை....
//ஊனமான காலுடன் நீயும்
ReplyDeleteஊமையான பெண்ணினமாய் நானும்
மௌனங்களை மட்டுமே சுமந்து
வெகு நேரமாய் பார்த்து கொண்டிருக்கிறோம் //
மனதை நெருடச்செய்யும் வரிகளுடன் ஊனம் பற்றிய கவிதையினை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். .
நன்றி ஐயா...
Deleteமனதில் ஊனம் இல்லாமல் இருந்தால் சரி...
ReplyDeleteம்ம்ம்...உண்மைதான்...
Deleteகால் ஊனமான காகமும்
ReplyDeleteமனம் ஊனமான பெண்ணும்
ஜன்னலும் நீண்டு விரிந்த பெருஞ்சாலையும்
அருமையான குறியீடுகள்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா...
Deleteஅருமை
ReplyDeleteநன்றி...
Deleteஆகமொத்தம் இருவருமே ஊமை ?
ReplyDeleteஆமாம்....
Deleteஊனமான காலுடன் நீயும்
ReplyDeleteஊமையான பெண்ணினமாய் நானும்
மௌனங்களை மட்டுமே சுமந்து
கனமான கணங்கள்...
ம்ம்ம்...நன்றி தோழி..
Deleteதுன்பம் எனபது இயற்கை துன்பமில்லாத வாழ்கை சுவாரசியம் இல்லை,ஓற்றை காலுடன் போராடும் காகத்தின் நிலை கவிதையா,கற்பனையா,இல்லை வாழ்கையின் மதிப்பீடா...
ReplyDeleteநிஜமே...அதை கவிதையாக்கி இருக்கிறேன்...
Deleteஉங்களின் ஒவ்வொரு கவிதைகளிலும் இழையோடுவது சோகமே ரசனையே என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் வாழ்த்துக்கள்
ReplyDeleteஹாஹா....செய்யுங்க....நன்றி...
Deletekakathirku siraku illai enraal sithainthathu vazhvu !
ReplyDeletepenne unakku naakku oru saattai.
engellam eduthaala mudiyumo,
arangetru !
நிஜமே...
Delete