Skip to main content

36 வது புத்தக கண்காட்சி....

சென்னையில்...
ஒய் எம் சி ஏ மைதானம்
ஜனவரி 11 - 23, 2013



36வது சென்னை புத்தக கண்காட்சிக்கு இந்த முறை மூன்று முறை போய் வந்தேன் (என் புத்தகம் ஒன்றும் அங்கு வைக்கபட்டிருந்ததால்...)....நிறைய புத்தகம் வாங்கினேன். அதைவிட நிறைய பராக்கு பார்த்தேன்னு உண்மையை சொல்லணும்.

அங்கு கவனித்த நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும். 

பார்வைகள்...
o   புத்தக கண்காட்சி என்பது மக்களால் ஒரு பெரிய பொருட்காட்சியாய் பார்க்கப்படுகிறது. குடும்பம் குட்டியுடன் வந்து சலிக்காமல் புத்தகங்களை சலித்து எடுத்து அதன் பிறகு சாப்பாட்டு கடையில் சாப்பிட்டு வீக்எண்டை கொண்டாடி செல்கிறார்கள்.

o   புத்தக பிரியர்கள் மற்ற நாட்களில் சமாதானமாய் வந்து மெதுவாய் புத்தகங்களை அனுபவித்து செல்கிறார்கள்.

o   பதிப்பகங்கள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களின் பார்வையே வேறு. வியாபார நோக்கில் மட்டுமில்லாமல் படிக்கும் மக்களின் நாடியை பிடித்து பார்க்கவும் இந்த திருவிழாவை பயன்படுத்துகிறார்கள். 



காரணங்கள்....
o   நிறைய விதம் விதமான புத்தகங்கள் ஒருசேர ஒரே இடத்தில் கிடைப்பதால்....

o   அதுவும் டிஸ்கவுண்ட்டுடன் கிடைப்பதால்...

o   புதுப்புது அறிமுக எழுத்துக்களை படிக்க முடியும் என்பதால்....(திருக்குறள் சைஸில் கவிதை இருந்தா புத்தகம் முழுவதையும் அங்கேயே படிச்சிட்டு மூடிவச்சிட்டு போயிருவாங்க..)

o   நானும் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்துட்டேன்னு பக்கத்து வீட்டிலிருந்து ஆபீஸ் வரைக்கும் சொல்றதுக்காக...

o   எந்த வயசில பெண்கள் வந்தாலும் கடலை போட...(சத்தியமா இடிக்க மாட்டாங்க. இது படிப்பு சொல்ற இடம்....நம்ம பய பிள்ளைகளுக்கு படிப்பு மேல பயபக்தி ஜாஸ்தி...)


நானும் மூணு நாளாய் பார்க்கிறேன். எல்லோரும் அவசரம் அவசரமாய் எதையோ தொலைச்சிட்டு தேடுற மாதிரி புத்தக கண்காட்சி முழுவதும் தேடிக்கிட்டே இருக்காங்க.  அவ்வளவு அறிவு தாகம் நம்ம மக்களுக்கு. வருஷத்திற்கு ரெண்டு தடவை கண்காட்சியை திறந்துவிடுங்கப்பா....



அதுவும் நம் தாய்க்குலங்களை கேட்கவே வேண்டாம். ரெண்டு குட்டிஸ் கூட வச்சிக்கிட்டு இருக்கிற அவ்வளவு குழந்தைங்க புத்தகங்களையும் வாங்கி குவிச்சிகிட்டே இருக்காங்க. 

கொஞ்சம் பெரிய பிள்ளைகள் கூட்டிட்டு வந்தா, அம்மாக்களை விட அப்பாக்கள் தான் 9th std கைடு+2 physics, chemistry,  maths formula புக் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.



ஒரு மனிதர் கால் வலியில் மேற்கொண்டு நடக்க முடியாமல் ஓரமாய் அமர்ந்திருந்த தன் மனைவிக்கு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு, ‘உன்னை போய் கூட்டிட்டு வந்தேனே’ என்று பல்லையும் கடித்துக் கொண்டிருந்தார்.  

இன்னொருவர் ஒரு புத்தக ஸ்டாலில் தன் மகளிடம்,  IIT Coaching புக்கை தேடு என்று சொல்லிக் கொண்டிருக்க அவளோ  Nancy Drew  கதை புக்கை கையில் வைத்து கொண்டு கண்ணால் plzzzz என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் தகப்பனிடம்.    

INFO Maps கடை ஒரு மினி ஸ்கூலாக மாறிப் போயிருந்தது.

சிறு குழந்தைகளின் பெற்றோர்களிடம் தன் குழந்தையை பாடப் புத்தகம் தவிர மற்றவற்றை படிக்க வைக்கும் ஆர்வத்தை காண முடிந்தது. ஆனால் குழந்தைகள் பெரிதாகும் போது பெற்றோர்களின் பார்வை அவர்களின் படிப்பு தொடர்பான புத்தகங்களின் மீது இருக்கிறதே தவிர, பொதுவான புத்தகங்களின் பக்கம் பார்வை பதியவேயில்லை.

பெரிய பரிட்சைக்கு படிக்கும் போது தான் பிள்ளைகளுக்கு காமிக்ஸ் புக் படிக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். மனசும் லேசாகும். தூய்மையாகும்.



நிறைய குடும்பஸ்தர்கள் மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் புத்தகங்களை புரட்டி கொண்டிருந்தார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடலை போட என்றும் ஒரு கும்பல் அலைந்துக் கொண்டிருந்தது. தனியாகவே புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த என்னை சிநேகமாய் பார்த்து சிரித்து வைத்த ஒருவன், அடுத்த ஸ்டாலில் நிற்கும் போது TNPSC Group IV எக்ஸாம் புக் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று பேச்சு துணைக்கு வந்துவிட்டான். கொஞ்சம் கவனம்...



இதையும் கேளுங்க....
மரத்தாலான பலகையில் நடக்கும் தளம் போடபட்டிருப்பதால் நிறைய பேருக்கு நாலைந்து சுற்று வருவதற்குள் கால் வலி வந்துவிடுகிறது.

சாப்பிட வாங்க என்று போர்டு மாட்டி அழைக்கிறார்கள்...சரி...கை அலம்ப வைத்திருக்கும் இடமோ சற்று தொலைவில்...குழந்தையுடன் சாப்பிட்டு முடிக்கும் பெண்கள் அங்கு வரை செல்லும் பொறுமை இழந்து கடையின் வாயிலின் ஓரமாகவே கை அலம்புகிறார்கள்.



முடிப்போமா...
ஆக மொத்தம், உங்களுக்கு யார் எந்த புத்தகம் வெளியிட்டாங்க, யார் யாரெல்லாம் வந்திருந்தாங்க இப்படிப்பட்ட நமக்கு வேண்டாத விஷயத்தை எல்லாம் விட்டுட்டு உங்களுக்கு புத்தக கண்காட்சியை ஓசிக்கு சுத்தி காமிச்சிருக்கேன்....இது போதும்னு நினைக்கிறேன்....

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ....
போங்க...போய் என்ஜாய் பண்ணுங்க...






Comments

  1. நல்லா சுத்தி காட்டினிங்க. அப்படியே அங்க யார் யார் என்ன பண்றங்கன்னும் சொல்லி இருக்கிறது நல்லா இருக்கு. அமாம், இதையெல்லாம் கவனித்த உங்களுக்கு புத்தகங்களை கவனிக்க நேரம் இருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. நிறைய புத்தகம் வாங்கினேன். பார்க்கவும் செய்தேன். நன்றி குமார்...

      Delete
  2. பல்வேறு தலைப்புகளில் கொட்டிக் கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
    வாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...உங்களின் பதிவையும் படித்தேன்...முதல் நாளை கண்மண் கொண்டு வந்துவிட்டீர்கள்...

      Delete
  3. எல்லாத்தையும் கவனிசீங்க எனது புத்தகம் இருக்குதான்னு பார்த்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டாவது நாளே பார்த்தேன் நண்பரே....திரும்பி வரும் போது வாங்க நினைத்து மறந்தேன்...நாளை வாங்கிவிடுவேன்...

      Delete
  4. அழகா சுத்தி காமிச்சிட்டீங்க. காரணங்கள்தான் ரசிக்க வைத்தது.
    //தனியாகவே புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த என்னை சிநேகமாய் பார்த்து சிரித்து வைத்த ஒருவன், அடுத்த ஸ்டாலில் நிற்கும் போது TNPSC Group IV எக்ஸாம் புக் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று பேச்சு துணைக்கு வந்துவிட்டான். கொஞ்சம் கவனம்...// ஓ! இப்படியும் ஐடியா இருக்கோ! ஹாஹா...ஹா.. நல்ல நகைச்சுவையாகவும் விசயத்தோடும்தான் எழுதியிருக்கீங்க..

    ReplyDelete
    Replies
    1. ஐடியா வொர்க் அவுட் பண்ணி பாருங்க....அடி வாங்காம தப்பிச்சா சரி....

      Delete
    2. அதுக்கு புத்தக கண்காட்சிக்கு வரணும்.. தனியா ஒரு பொண்ணு வரணும்.. நான்
      TNPSC Group IV பிரிப்பேர் பண்ணனும். இவ்வளவும் தாண்டி அவங்க என்னை அடிக்காம இருக்கனும். ஐய்யோ சாமி.. இப்பவே கண்ணை கட்டுது..

      Delete
  5. //36வது சென்னை புத்தக கண்காட்சிக்கு இந்த முறை மூன்று முறை போய் வந்தேன் (என் புத்தகம் ஒன்றும் அங்கு வைக்கபட்டிருந்ததால்...).// உங்ககிட்ட பிடிச்சதே இதுதான். உண்மையை போட்டு உடைச்சிருவீங்க..

    ReplyDelete
    Replies
    1. என்ன தப்பு இதுலே....எல்லோருக்குள்ளும் சுயநலங்கள் உண்டுதானே...

      Delete
    2. தப்பேயில்லை..நிச்சயமாக சுயநலம் உண்டு..

      Delete
  6. //ஆக மொத்தம், உங்களுக்கு யார் எந்த புத்தகம் வெளியிட்டாங்க, யார் யாரெல்லாம் வந்திருந்தாங்க இப்படிப்பட்ட நமக்கு வேண்டாத விஷயத்தை எல்லாம் விட்டுட்டு உங்களுக்கு புத்தக கண்காட்சியை ஓசிக்கு சுத்தி காமிச்சிருக்கேன்..// ஓசிக்கு சுத்தி காமிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பொழைச்சு போங்க...நன்றி....

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் நன்றிதான சொன்னேன். பொழைச்சு போங்கன்னு சொல்லிட்டீங்க.. இதுக்கும் நன்றி.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி