Skip to main content

Posts

Showing posts from December 30, 2012

கும்கி - யானை

Director:   Prabhu Solomon Producer:   Ronnie Screwvala  , Subash Chandra Bose Music Director:   D. Imman Lyricst:   Yugabharathi Vikram Prabhu, Lakshmi Menon, Thambi Ramaiya  படம் வந்து ஒரு மாசம் கழிச்சு அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப நல்லது.  ஏன்னா,  அப்போதானே எல்லோரும் படத்தை பார்த்து முடிச்சிருப்பாங்க. முதல் ரெண்டு நாள்ல எழுதினா யாருக்குமே புரியாது. எவ்வளவு மார்க் போட்டிருக்காங்கன்னு மட்டும் தான் பார்ப்பாங்க.  அதே மாதிரி, நான் எழுதுறதும் அவங்களுக்கு புரியும். அவங்களும் நான்  படத்தை விமரிசித்ததில் ஏதாவது தப்பு இருந்தா சொல்ல முடியும்.... அப்பாடா...லேட்டா படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு எத்தனை சப்பைக்கட்டு சொல்ல வேண்டியிருக்கு.... சரி...இனி கும்கி யானையை பார்ப்போம்... இந்த படத்துக்கு கும்கின்னு பெயர்  வச்சிருக்காங்க....ஊரு பக்கம் இருக்கிறவங்களுக்கு கும்கிக்கு அர்த்தம் தெரியும். சிட்டியில இருக்கிறவங்களுக்கு தெரியவே தெரியாது. ஒரு லைன் அதை பத்தி சொல்லியிருக்காங்க....அது போதுமான்னு தெரியலை... இந்த

பேப்பர் பையன்...

கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள் 'அக்கா' என்று தலைசொறிந்து சிரித்தான்... உனக்கும் சம்பந்தம் இல்லை எனக்கும் உடன்பாடு இல்லை எதற்கு அதற்கு காசு என்றேன் என்னை முறைத்துவிட்டு போய்விட்டான்.... நேற்று வந்தபோது ஒரு பார்வை பார்த்தான் என்னை சிரித்து வைக்கவா வேண்டாமா என்று... 'என்ன' என்றேன்... 'ஒண்ணுமில்லைக்கா' என்றான் 'ம்ம்ம்...'என்று சொல்லி சைக்கிள் நகர்த்த தயாரானான்... அவனை நிறுத்தி அவன் கையில் ஐம்பது ரூபாயை அழுத்திய போது அழகாய் சிரித்தான்... அவன் பிறந்த தினம் கேட்டபோது புரிந்து சிரித்தான்... சொல்லிவிட்டு போனான்...

Happy 2013....

வழக்கம் போல்தான் இன்றும்... பால்காரர் பேப்பர்காரர் பூக்கார பெண்மணி வாக்கிங் போகும் நண்பர் நம் தெருகோடி பிள்ளையார் என்று யாருமே மாறாத இன்றைய காலையில் விடியல் மட்டுமே கோலம் போட்டு அழைத்து செல்கிறது நம்மை அடுத்த வசந்தத்தின் வாசலுக்கு... நேற்றைய ஆசைகளின் துவக்கமாய் இன்று... நினைத்ததை நடத்துவோம் நடப்பதையே நினைப்போம் அப்போதுதான் வருடத்திற்கொரு முறை வரும் வசந்தம் வாழ்க்கை முழுவதும் நமக்கே...

புது வருஷம்.....

நாளை இதே நேரம் தூங்கி எழுந்தா புது வருஷம்.... இப்போதான் போன வருஷம் தூங்கி எழுந்த மாதிரி இருக்கு... இவ்வளவு வேகமா நாள் எல்லாம் ஓடினா நாம ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் போதுலே இருந்து எடுத்த resolutions எல்லாம் எப்போ நிறைவேத்துறது.... டைம்மே பத்தலை... எட்டாம் கிளாஸ் படிக்கும் போது ஸ்கூலுக்கு ஒரு நாளாவது சேலை கட்டிரனும்னு உறுதி எடுக்கிறதுதான்.... அம்மா புண்ணியத்துல அதை பதிமூணாம் கிளாசில தான் நிறைவேத்த முடிஞ்சுது... ஊர் ஊரா வேலை பார்க்காம ஒரே இடத்துல வேலை பாக்கணும்னு ஒவ்வொரு வருஷமும் உறுதி மொழி எடுக்கிறதுதான்.... ஆனா வீட்டுக்காரர் புண்ணியத்துல அது நடக்காம போயாச்சு.... ரோட்டில போகும் போது வரும் போது கண்ணில படுற அநியாயத்தை விஜயசாந்தி ஸ்டைல்ல தட்டி கேட்கனும்னு உறுதி எடுக்கிறதுதான்.... சரி போகட்டும், சமுதாயம்னா இப்படிதான் இருக்கும் அப்படின்னு பெரிய ஞானி கணக்கா மனசு சமாதானம் ஆயிடுது... நாய்க்குட்டி ஒண்ணு வளர்க்கணும்னு போன வருஷம் உறுதி எடுத்தேன்... நாய்க்குட்டி கூடவே என்னையும் சேர்த்து வெளியவே கட்டிப் போட்டுருவேன்னு பயம் காமிச்சாங்க... அதனாலே அதுவும் நடக்கலை... ஆனா லைப்ல நாம எடுக்காத resolutions