பால்கனியின் கம்பியில் வெள்ளை புறா தன் முகத்தின் முன்னே மேலிருந்து கீழாக வலை பின்னும் சிலந்தியை உற்றுப் பார்த்தபடி.... சிலந்தியோ புறாவின் தலையை சுற்றி வலை பின்னத் தொடங்க புறாவும் தலையை அங்கும் இங்குமாக நகர்த்தியும் திருப்பியும் சிலந்தியை ஒதுக்க.... சிலந்தி பிடிவாதமாய் வலையை சுற்ற சடக்கென்ற புறாவின் கொத்தலில் காணாமல் போனது சிலந்தி....... இதை காணும் போது முந்தைய நாளின் சம்பவம் ஒன்று நினைவில் நிழலாடியது பக்கத்து வீட்டு குழந்தையும் அவர்களின் டாபர்மெனும்.... குழந்தை கையில் எடுக்கும் அனைத்தும் நாய் பிடுங்குவதும் எறிவதுமாக அருமையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... குழந்தையின் அம்மா சாப்பிட வைத்துச்சென்ற பிஸ்கட்டை குழந்தை கையில் எடுக்க அதையும் செல்ல பிராணி பிடுங்க... எடுப்பதும் பிடுங்குவதும் தொடர நாயின் இந்த செயலுக்கு குழந்தையின் சிரித்த முகம் சிவந்த முகமாக மாற தொடங்கி கையில் கிடைத்த பொம்மையை குழந்தை நாயின் மேல் வீச அது அப்படியே பின்பக்கமாக நடந்து ஒதுங்க..... குழந்தையின் சிரிப்பை மீறிய ஒரு சிறிய கோபம் தன் சுயத்திற்கானது... புறாவின் பொறுமை மீறிய ஒரு சிறிய கோபம் கூட அதன் சுயதிற்குதான்.... இரண