Skip to main content

Posts

Showing posts from August 5, 2012

எனக்கு.....

உன் பொய்களை மறக்கவும் மறுக்கவும் எனக்கு உரிமைகள் உண்டு... நெஞ்சத்துக்கு அருகில் நிறுத்தவும் தூக்கவும் எனக்கு நியாயங்கள் உண்டு.... யாராயிருந்தாலும் கருத்துக்கு உடன்படவும் விலகவும் எனக்கு சுதந்திரம் உண்டு.... அலையும் கண்களை ஆதர்சிக்கவும் அடக்கவும் எனக்கு அதிகாரங்கள் உண்டு... ஆலிங்கனங்களை ஏற்கவும் மறுக்கவும் எனக்கு அனுமதிகள் உண்டு பாரதியை நம்பக்கூட பிறவிகள் பல தாண்ட எனக்கு அகந்தையும் உண்டு...