Skip to main content

நீர்ப்பறவை - ஓர் அலசல்




Cast : Vishnu, Sunaina, Nanditha Das, Samuthra Kani
Director : Seenu Ramasamy
Producer : Uthayanidhi Stalin
Music : N R Ragunanthan

நீர்ப்பறவை என்பது Gull (Sea Gull) என்னும் பறவையை குறிக்கும். அந்த பறவை ரொம்ப அறிவாகவும் கூட்டமைப்பான வாழ்வு முறைகளையும் பின்பற்றக்கூடியது என்று கேள்விபட்டிருக்கிறேன். 

எனக்கு ரொம்ப பிடித்து போய் அதை படமாக கூட வரைந்திருக்கிறேன். 

Sea Gull


ஆனால் இந்த படத்தில் அந்த பறவையின்  அறிவாளித்தனத்தை காணவில்லை. அந்த மீனவ மக்களின் வாழ்வியல் மட்டும் அழகாக காட்டப்பட்டுள்ளது. 



இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு...சரியாகவே கதாபாத்திரத்துக்குள் ஒட்டவேயில்லை. இந்த மாதிரி படங்களில் யதார்த்தமாய் நடிக்கவேண்டும். வேறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம். 

குடிகாரனாய் வரும் காட்சிகளில் மனதில் நிற்கவேயில்லை. அவருடைய அம்மா, அப்பாவாக வருபவர்கள் மட்டுமே நம் கவனத்தில். 



நேர் எதிர்பதமாக நம் கதாநாயகி சுனைனா சூப்பர்.  சரியான தேர்வு.பெரும்பாலும் இந்த மாதிரி costumeயில் ஹீரோயின்  அழகாக தெரியமாட்டார். சுனைனா அழகாகவும் இருக்கிறார். யதார்த்தமாய் நடித்தும் இருக்கிறார்.    



மற்ற எல்லோரும் படத்தின் தன்மை அறிந்து செய்திருக்கிறார்கள். சமுத்திர கனி சாட்டை படத்திற்கு அப்புறம் இதில். அளவாய் கண்ணிலே கண்ணியம் காட்டியிருக்கிறார். 



நந்திதா தாஸ் எல்லோரையும் விட ஒரு பிடி அதிகமாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரி நிறைய படம் செய்த அனுபவம் தெரிகிறது.

மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களின் கிறிஸ்துவ சமய சார்பையும் அளவாக எடுத்துரைத்திருக்கிறார் டைரக்டர். அதுவும் பாதிரியாரின் பேச்சுக்கு கட்டுப்படுதல் போன்ற விஷயங்கள் கூட மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டுள்ளது.



தகப்பனும் தாயும் சேர்ந்து இலங்கை ராணுவத்தால் சுடப்பட்ட தன் மகனின் உடலை தங்களுடன் வைத்து கொள்ள வேண்டி தன் வீட்டிலேயே புதைத்து வைப்பது எல்லாமே நடைமுறை சாத்தியம். அந்த பாசம் நிஜம் என்பதை நம் கண்ணில் இருந்து வரும் ஒரு துளி நீர் சாட்சி.


கண்ணில் தப்பாய் பட்டவை : 

பாடல்கள் எல்லாமே ஏதோ திருசபை கூட்டத்திலிருந்து ரகுநந்தன் எழுந்து வந்த மாதிரி தேவதூதனின் துதியாய் இருக்கிறது. திகட்டுகிறது. ஒரு மதம் சார்ந்த மக்களை வைத்து படம் பண்ணும் போது அணைத்து பாடல்களுமே அந்த மதம் சார்ந்த இசையின் அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.   

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் தன்மை சமீப காலமாய் அதிகரித்துவருகிறது. நல்லதுதான். 

வழக்கு எண் 18/9 படமே முதல் தடவை பார்க்கும் போது புரியாத மாதிரியும் இரண்டாம் முறையே புரிந்ததாகவும் என் தோழிகள் சிலர் சொன்னார்கள்.  

அதற்கு காரணம் எல்லா சஸ்பென்சையும் கடைசி நேரத்தில் அவிழ்க்க நினைப்பது. அதற்கு சீன் continuity தேவையாகிறது. அப்போது repetition ஆகிறது சில காட்சிகள். அதுவும் இல்லாமல் முதலில் இருந்து புரியாமலே ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைசியில் தான் புரிகிறது. தியேட்டர் விட்டு வரும் போது நம் தலையில் ஏதோ பாரம் ஏத்தி வைத்தது போல் தோன்றும். 

சரி அந்த படத்தை விடுவோம். இதிலும் அதே தப்பைதான் செய்திருக்கிறார்கள். ஏதோ கதாநாயகியே கொலை செய்தது போலும் அவள் என்ன காரணம் சொல்வாள் என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டு வேறு மாதிரி முடித்துவிட்டார்கள். 

இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?....
டைரக்டர் படத்தில் முக்கியமாக இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டு தள்ளுவதை பற்றி சொல்ல வந்து, அதற்காக ஒரு கோர்ட் சீனும் வைத்து, ஆனால் அதை இந்த சஸ்பென்ஸ் விஷயத்தால் சப்பென்று ஆக்கிவிட்டார். சொதப்பிவிட்டார். 

இனிமேல் நிஜ விஷயங்களை படம் எடுப்பவர்கள் இந்த தப்பை செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோம். 


Comments

  1. நீர்ப்பறவை may refer to any water bird, not necessarily sea gull. But in the context of this film, with location in a coastal village, u r correct to refer to sea gull. அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல என்ற பழமொழி குளத்தைத்தான் குறிப்பிடுகிறது.

    The village is Manapad near Tirchendur. But the Director uses it only as a location and mixes it with Ramnad coast. No fisherman from Manapad was ever killed by Srilankans. it s the fishermen of Ramnad who get killed by them. The Srilankans harbor a grudge against them as they believe these fishermen were functioning as the conveyer belt for LTTE. So, the Director wants u believe that the manapad scenes r nothing but Ramnad's. However, many other scenes r from Ramanad i.e Thangatchimadam, to be exact.

    Vishnu may not be up to your expectations. But, as one who knows Manapad, I daresay he reminds me of a brash youth of that area. If u want it to b so realistic, then only a real youth from the area shd be roped in to play the role: an impossibility.

    The general opinion is that Nandidata Das hasn't done as expected from a artiste of her level. Perhaps she hasn't been directed well; or was not given freedom to essay the role as she has liked. She is a very expert woman in arts. She cd have done it better than she has done if allowed.

    I agree with u that the Xian touch in all the songs is an overkill. But v miss an important point here: the village of Manapad has devote catholics unseen anywhere in TN. It is in this village that St Xavier meditated for years; and the film shows the very cave where he did that. So, their lives is so entangled inseparably with Xian belief system that the songs, all of them, shd necessarily be mixed with such touch.

    The film has many many defects, some of which u have adumbrated. Yet, the overall impact of the film - at least on me - is tremendous. I did not see the film. I lived it for three hours.

    ReplyDelete
    Replies
    1. kulasekaran

      // So, the Director wants u believe that the manapad scenes r nothing but Ramnad's //

      they r putting a slide as 'Rameswaram'

      May be in ur perspect,vishnu may be suitable. but he hadnt don the role with ease....

      i agree with u in Nandhita das matter. she hadnt given sufficient part in the film. in some scenes whr she is searching for her husband and running towards the sea r filmed in an artificial way.

      Despite the defects, the movie is real....

      Delete
  2. nice review....
    இப்படி இங்லிஷ் ல கமெண்ட் போட்டா தான் மதிப்பு போல...விமர்சனம் நன்று...

    ReplyDelete
    Replies
    1. thanx jeeva...
      i entertain both tamil and english...
      நன்றி...

      Delete
  3. மேடம்,
    நீர்ப்பறவை படத்தை தயாரித்தது உதயநிதி ஸ்டாலின்.

    இயக்குனருக்கு மிகுந்த கட்டுப்பாடும் நெருக்கடியும் நிறைந்த சூழலில் இப்படி ஒரு படைப்பு வந்தததே அதிசயம்.
    படம் சொல்லும் மிக முக்கியமான இரண்டு கருத்து.
    1. குடியினால் வரும் தீமை
    2. மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது.

    இந்த இரண்டு பிரச்சனைக்கு மூலக்காரணமே தயாரிப்பாளரின் தாத்தாதான்.

    இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளரை நைசாக ஏமாற்றி, அதே நேரத்தில் சொல்ல நினைத்த கருத்தை ஒரளவுக்கு சொல்லி இப்படத்தை எடுத்திருக்கிறார்.
    வேறொரு தயாரிப்பாளர் சீனு ராமசாமிக்கு கிடைத்திருந்தால் இப்படம் இன்னும் காவியத்தன்மையோடு,பிரச்சனைகளை மிகத்தீவிரமாக எடுத்துரைத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பின்னணியில் இருக்கும் பல விஷயங்களால் ஒரு கதையின் ஆழமும் தீவிரமும் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது....
      டைரக்டர் சற்று சிரமப்பட்டிருப்பார் இரண்டு பக்கமும் பாலன்ஸ் பண்ண....

      நன்றி விவரம் பகிர்ந்ததற்கு....

      Delete
  4. விமர்சனம் எழுத ஒரு துணிச்சல் வேண்டும் உங்களுக்கு இருக்கு தோழி ............நல்ல வருவீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எல்லோரும் அந்தப் படம் அருமையாயிருக்கு எனும்போது நீங்கள் அதிலிருக்கும் சில குறைகளைக் கூறும்போது இப்படியும் ஒரு பார்வையிருப்பது புரிகிறது. நான் படம் பார்க்காததால் என்னால் விவாதத்திற்கு வரமுடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. படத்தை பாருங்கள். 75% ஓகே....
      நன்றி எழில்...

      Delete
  6. நல்ல அலசல்...
    எல்லோரும் கதாநாயகி பற்றித்தான் நன்றாக பேசியிருந்தார்கள்..:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா....அளவாக அழகாக நடித்திருக்கிறார் சுனைனா....

      Delete
  7. நல்லதொரு விமர்சனத்தைப் படித்த திருப்தி ஏற்பட்டது. பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. படம் நன்றாக இருக்கிறது. நான் சொன்னது நீங்கள் வரைந்த படத்தை. அது இருக்கட்டும், ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீ கல் படித்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. thanx shahjahan...

      படித்திருக்கிறேன்.....their law of the Flock and jonathan and seven others are outcasted from their flock but returned with full flight...
      ரொம்ப பிடிக்கும் அந்த fiction....

      Delete
  9. Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions. Earn points for referring your friends and exchange your points for cool gifts.

    ReplyDelete
  10. விமர்சனம் அருமை.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவகுமார்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி