Skip to main content

பெண்கள் பலவிதம்.....







பெண்களில் தான் எத்தனை விதம்... சில பெண்கள் குடும்பத்திற்காக மட்டும் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்திருப்பார்கள். ஆனா உருவம் மட்டும் குண்டு பூசணிக்காயாக மாறியிருக்கும். சிலர் தன்னை மட்டுமே அழகு படுத்திக் கொண்டு, ஒரு வேலையும் செய்யாமல், சமையல் செய்ய சமையல்கார அம்மா , வீடு பெருக்க, துடைக்க, பாத்திரம் கழுவ என்ற ஒவ்வொன்றுக்கும் வேலைக்காரி, பிள்ளைகளை கார் டிரைவர் வைத்து வளர்ப்பார்கள். சில பெண்கள் மட்டும் தான் தன்னையும் பார்த்து கொண்டு வீட்டுக்காகவும் உழைப்பார்கள்.


நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன் சேரன் எக்ஸ்பிரஸில். ஏறும்போதே என் இருக்கைக்கு அருகில் யார் இருக்கிறார்கள் என்று chartல் பார்த்துவிட்டுதான் ஏறுவது என் வழக்கம். பார்த்ததில் ஒரு வயதான தம்பதியரும் (வயது 72, 67) அடக்கம். அவர்களின் மூன்று வயதுடைய பேத்தியும் உடன் இருந்தாள்.

அவர்களின் இருக்கையின் எதிரில் ஒரு பெண்ணும் அவளுடைய இரு குழந்தைகளும் இருந்தனர். அந்த இரண்டாவது பையன் இந்த குழந்தையுடன் விளையாட முயற்சி பண்ணும போதெல்லாம் இந்த வயதான பெண்மணி 'make them sleep' ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார்....தன் பேத்தியை தூங்கவும் வைத்துவிட்டார். தன் பேத்தியை பத்திரப்படுத்துவதில் அவ்வளவு கவனம்.

காலையில் இறங்கும் முன் சற்று நேரம் உட்கார்ந்திருந்த போது மேல் பெர்த்தில் படுத்திருந்த ஒரு இளைஞனும் இறங்கி வந்து இந்த பெண்மணியின் அருகில் அமர்ந்தான். உடனே அந்த வயதான அம்மா தன் கற்பே பறி போன மாதிரி 'என்ன இப்படி பக்கத்தில் எருமைமாடு மாதிரி உரசிக்கிட்டு உட்காரே...தள்ளி போய் உட்காரு' என்று சத்தம் போட்டார்....வீட்டிலே அந்த வயதான மனிதரின் நிலைமையும் இதுதான் போல....அவர் எத்தனை வருஷமாகுதோ இந்த அம்மாவை எதிர்த்து பேசி.....

இந்த மாதிரி பெண்மணிகளை என்னவென்று சொல்வது....இந்த அம்மாகிட்ட மாட்டின மருமகள் எல்லாம் என்ன பாடுபட்டுக்கிட்டு இருப்பாங்கன்னு என்னாலே யோசிக்கவே முடியலை.....பாவம் தான் அந்த பெண்கள்...







இப்படி சில பெண்கள் என்றால், Airtel Super Singer Junior நிகழ்ச்சியில் வரும் அம்மாக்களை பார்த்தால்,சகித்துக்கொள்ள முடியவில்லை......தன் விடலை பிள்ளைகளுக்கு சல்லடை மாதிரி ஆடைகளை போட்டுவிட்டு, பதினோரு வயது பெண்பிள்ளையை பதினாறு வயது பருவ மங்கையாக்கி, டிவியில் பாடவிட்டு, ஆடவிட்டு தானும் சேர்ந்து ஆடி, அவர்கள் கெட்டு போக தாயே துணை போகும் அவலம் இங்கு தான் நடக்கிறது. எப்படி இவர்களின் கணவன்மார்கள் இவர்களுடன் குடித்தனம் நடத்துகிறார்கள்? அது சரி... இவள் ஒரு பக்கம் இப்படி போனால் தானே, அவன் வேறு பக்கம் போக முடியும்......இந்த மாதிரி சீர்கேடுகளை பெண்கள் சற்று குறைக்கலாமே.....நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் தான் உங்களின் பெண் குழந்தைகளும் ஒழுக்கமாக வளருவார்கள். 

முன்பு எல்லாம் அம்மா கண்டிப்பாகவும், அப்பா செல்லமாகவும் பெண் குழந்தைகளை வளர்ப்பார்கள். இப்போது அப்படி இல்லை. இருவருமே செல்லம கொடுக்கிறார்கள். தப்பில்லை....ஆனால் சற்று கண்டிப்பும், யாராவது ஒருவருக்கு பயமும் இருக்க வேண்டும். கடைக்கு போனால்  உங்கள் பெண்ணிற்கு, கண்ணில்படும் டிரஸ், உங்களை உங்கள் அம்மா போடவிடாமல் செய்த டிரஸ் எல்லாம் எடுத்து கொடுக்காதீர்கள் அவளுக்கு. உங்கள் பெண் உங்களுக்கு என்றுமே குழந்தைதான். மற்றவர் கண்களுக்கு அவள் என்றுமே அழகுபதுமைதான். சின்ன வயதில் 'பொம்மை மாதிரி இருக்கா' என்பார்கள். விடலை பருவத்தில் 'சிக்குனு இருக்கா' ன்னு நினைப்பாங்க. காலேஜ் போகும் போது 'பிகர்' ஆக்கிருவாங்க......கவனம் தேவை....





....இன்னும் எழுதுவேன்





Comments

  1. நிஜம்தான். இன்று கலாச்சார சீரழிவிற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். தன் பந்தாவைக் காமிப்பதற்கு குழந்தைகளை பலிகடா ஆக்குகிறார்கள்.

    ReplyDelete
  2. நம் கலாச்சார சீரழிவு ஆரம்பிப்பதே இன்றைய அம்மாகளிடம் இருந்துதான்......ஜீன்ஸ் போடலாம் தப்பில்லை, ஆனா இடுப்பு தெரியிற மாதிரி டாப்ஸ் போடக்கூடாது.....இன்றைய பெண்கள் இன்னும் முழுமையாக அம்மா ஆகவில்லை.....part time job மாதிரி நினைக்கிறாங்க அம்மா வேலையை......
    நன்றி விச்சு.....

    ReplyDelete
  3. நவீன அம்மாக்கள் வேலை பணம் அதன் பின்பே பிள்ளை கணவர் என்று மாறுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....இரண்டுக்கும் 50, 50 share கொடுக்கலாமே....

      Delete
  4. அம்மாவின் பொறுப்பு பாதுகாப்பது என்று புரியாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தம்தான் அகிலா.

    //கலாச்சார சீரழிவு ஆரம்பிப்பதே இன்றைய அம்மாகளிடம் இருந்துதான்//
    சரியாகச் சொல்லிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. நிறைய பெண்கள் இன்னமும் அம்மா என்பது தனக்கே உரித்தான பொறுப்பு என்பதை உணரவில்லை.....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி