Skip to main content

என் தாத்தாவும் தமிழும்....

                           நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, தமிழ் என்பது என் அந்நிய மொழியாகி போனது. காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான் - convent + English மேல இருந்த மோகம். இந்த சமயத்தில்தான்  என் தாத்தா கண் அறுவை சிகிச்சைக்காக Madras இல் (பழைய சென்னை) இருக்கும்  எங்கள்  வீட்டுக்கு  வந்திருந்தார்கள். தாத்தா, என் அம்மாவின் அப்பா மட்டுமல்லாது என் அப்பாவின் தாய்மாமாவும் கூட. அவர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பு வீட்டின் முதல் பெண்ணான என் தலையின் மீது விழுந்தது. நான் ரொம்ப பொறுமைசாலி என்பது என் அம்மாவின் கணிப்பு (உண்மைதான், நம்புங்க...).

                             இதற்காக நான் தியாகம் செய்த விஷயங்கள் நிறைய. என் dance class, hindi class எல்லாம்  மூன்று வாரத்திற்கு cut ஆனது.  என் வீட்டு எதிரில் தான் கலைவாணர் அரங்கம். அங்கு மேடை ஏறும்  நாடகங்கள், children's film festival etc., etc.,  இதை எல்லாம் சில மாதங்களுக்கு துறக்க வேண்டி இருந்தது (அந்த வயசில் இதெல்லாம் பெரிய விஷயம்தான்).

                            தாத்தா ஊரில் இல்லாததால் அங்கிருக்கும் வயல் வேலைகளை பார்ப்பது சம்பந்தமாக என்னுடைய பெரிய மாமாவிற்கு (மாமாவிற்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள வேறு சில பெருசுகளுக்கும் தான்) தாத்தா அடிக்கடி கடிதம் எழுதுவது உண்டு. கண் பார்வை சரியில்லாததால், நான் தான் தாத்தாவுக்காக கடிதம் எழுதுவது வழக்கமாகி போனது.

                            தாத்தா சொல்ல சொல்ல நான் எழுதுவேன் அதுவும் தமிழில். ஓவ்வொரு paragraph எழுதியதும் அதை படித்து காட்டவேண்டும். தப்பாக எழுதினாலோ அல்லது படித்தாலோ சத்தம் போடுவார்கள். அம்மாவிடம் complaint பண்ணி பார்த்தேன். அம்மா கண்டுக்கவே இல்லை. அடுத்தது  அப்பா ....பிரயோஜனமில்லை .

                             ரொம்ப பொறுக்கமுடியாமல் ஒரு முறை  மாமாவுக்கு கடிதம் எழுதும் போது கடிதத்தின் கடைசியில் தாத்தாவிற்கு தெரியாமல் மாமாவிடம் complaint எழுதிவிட்டேன். நான் எழுதியதை தவிர தாத்தா dictate பண்ணி எழுதியதை மட்டும் படித்து காண்பித்துவிட்டு சமர்த்தாக கடிதத்தை post பண்ணிவிட்டேன். 

                              அடுத்த வாரமே மாமா மெட்ராஸ் வந்த போது, எங்க தாத்தாவிடம் 'ஏன் சின்ன பிள்ளையை சத்தம் போடுறீங்க?' என்று திட்டிவிட்டு போனார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இனிமேல் தமிழில் கடிதம் எழுதும் தொல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் தாத்தா விடுவதாக இல்லை. என்ன ஓன்று... தாத்தா என்னை  சத்தம் போடுவது குறைந்திருந்தது....இல்லை என்றால் நான் நிறைய கடிதம் எழுதி எழுதி தமிழ் சற்று நன்றாக எழுத கற்றுக் கொண்டிருக்கவேண்டும். இப்படியாகத்தான் என் தாத்தாவால் என் அருமை தமிழ் வளர்ந்தது . தமிழின் மீது எனக்கிருந்த வெறுப்பு குறைந்தது.  

                              அதன் பிறகு என் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை லக்ஷ்மி அவர்கள். தமிழ் வகுப்பு என்றாலே கடைசி பெஞ்சுக்கு ஓடும் என்னை இழுத்து வந்து முதல் பெஞ்சில் உட்காரவைத்து தமிழ் வாசிக்க கற்றுக் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்த கதைகளை சேர்த்து என் அம்மா bind பண்ணி வைத்திருந்த புத்தகங்கள்  எல்லாம் என் கண்ணில் பட்டது.  அதனால் லக்ஷ்மி டீச்சர் அவர்களுக்கு  நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். (அப்பாடா...ஆசிரியர் தினத்தை ஒட்டி என் ஆசிரியர் ஒருவரை நினைத்துவிட்டேன்)

                              இதை எல்லாம் வைத்து நான் தமிழில் பெரிய வித்வானாகிவிட்டதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். ஏதொ என்னாலும் தமிழை தவறில்லாமல், எழுத்து பிழைகள் இல்லாமல் எழுத முடியும். தமிழின் மீது மங்காத ஈர்ப்புடனும் பற்றுடனும் இருக்க முடியும். கவிதைகூட எழுதலாம்.... 

Comments

  1. அட... கோவைப்புதூரிலா இருக்கிறீர்கள். நாங்கள் அங்கே குடியேற இருக்கிறோம். முடிந்தால், தொடர்பு கொள்ளவும். யாமும் ஓர் வலை எழுத்தன் :)
    k.selventhiran@gmail.com

    ReplyDelete
  2. nallathu thaan thaththa seiythullaar.. antha vayathil athu thavaraaka pattullathu.. nadai arumai...vaalththukkal

    ReplyDelete
  3. This article made me to go down the memory lane. You have talked about thatha's tamil artillery. My dad is afraid of taking English lessons in front of him. His is a multi-lingual & versatile character. The memories still linger...

    ReplyDelete
  4. True Saravana.....Such a intelligent man with our loving grandma by his side....nice memories...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...