மெய்யழகன் ஆண்கள் உலகம் இயக்கம்: பிரேம் குமார் நடிகர்கள்: கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜூ எடிட்டிங்: கோவிந்தராஜ் இசை: கோவிந்த் வசந்த் தயாரிப்பு நிறுவனம்: 2D எண்டடெயின்மெண்ட் (ஜோதிகா, சூர்யா) ****** மெய்யழகன் மெய்யழகனை எழுதும் அளவுக்கு உந்தியிருப்பது இரண்டு விடயங்கள்: ஒன்று, கதையின் பின்புலத்தில் கத்தியின்றி இரத்தமின்றி வெட்டப்படும் உறவுக்கயிறு. இரண்டாவது, கண்முன் காட்டப்படும் கிராம, நகர மனித மேம்பாடுகள்/சிக்கல்கள். வீட்டு / சொத்து பிரச்சனை: திரைக்கதையில், எடுத்ததும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக காட்டப்படும் ஒரு குடும்பம் தனது வீட்டைத் துறந்து இரவோடு இரவாக வெளியேறும் காட்சி. அந்த வீடு அந்த குடும்பத்தலைவரின் சகோதரியின் கைக்கு போய் சேருவதாகப் பேசுகிறார்கள். அதுவும் கூட முணுமுணுவென்று. பின்னால் அந்த பிரச்சனைக் குறித்து பேசுவார்கள் என்று பார்த்தால், யாரும் அது குறித்து பேசவில்லை. கல்யாண வீட்டு சாப்பாட்டு அறையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த ந...