கற்பிதங்களை உடைத்தல் 'ஒரு இட்லி உண்டா, பொங்கல் உண்டா..' 'வறட் வறட்டென்று பிரேட்டை காலையில் சாப்பிடுகிறார்கள் வெளிநாட்டுக்காரங்க..' 'நீங்க அங்க போனா என்ன சாப்பிடுவீங்க..' என்றெல்லாம் என் UK பயணங்களுக்குப் பிறகு, இங்கிலாந்தின் உணவு முறை சார்ந்து என்னை நோக்கி கேள்விகள் வந்திருக்கின்றன. நேற்றும் கூட என்னிடம் பேசிய பிரண்ட் ஒருத்தி, 'நீ போயிருக்கேயில்ல, பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு செஞ்சு கொடு' என்றாள். அப்ப, இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் மக்கள் சாப்பிடுவதெல்லாம் கெட்டது என்று எப்படி இவர்களாக முடிவு செய்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இது குறித்து பட்டிமன்றங்களிலும் விவாதங்களிலும் கூட பேசி சந்தோஷப்பட்டுக் கொள்வதைக் காணமுடியும். இது உணவு சார்ந்து. இது தவிர, அவர்களின் திருமண வாழ்வு சார்ந்து, ஆண்-பெண் நட்பு/உறவு சார்ந்து பல அனுமானங்களுடன் என்னிடம் கேட்டவர்கள் அதிகம். உலகில் வாழும் மற்றவர்களின் பண்பாடு, சமூகம் போன்றவைக் குறித்த தாழ்வான கருத்துகள் நம்மிடையே நிலவுவதும், நம் கலாசாரம்தான் சிறந்தது என்று கொடி பிடிப்பதும் அபத்தமென நினைக்கிறேன். அவர்களுக்குள்ள...