பாப்லா நெருடா
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன்.
Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர்.
அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டுக்காக, அந்த கவிதையில், இரண்டு stanzas மட்டும் எடுத்திருக்கிறேன்..
It happens that I'm tired of being a man.
It happens I go into tailor shops and movies
withered, impenetrable, like a swan of felt
navigating a water of origins and ashes.
The odor of barber shops makes me weep aloud.
I just want a rest from stones or wool,
I just want not to see establishments or gardens
or elevators, or merchandise, or eyeglasses.
2. Leonard Grucci:
It happens that I am weary of being man.
It happens that I enter tailor shops and movies
faded, impenetrable, like a swan of felt
swimming in spring water and ashes
The odor of barber shops makes me weep aloud.
I alone want quiet of stones and wool,
I alone want to see neither establishments nor gardens,
nor wares, nor spectacles, nor elevators.
3. H R Hays:
It so happens I am tired of being a man.
It so happens, going into tailorshops and movies,
I am withered, impervious, like a swan of felt
navigating a water of beginnings and ashes.
The smell of barbershops makes me weep aloud.
I want is a rest from stones or wool,
all I want is to see no establishments or gardens,
no merchandise or goggles or elevators
கிட்டத்தட்ட எல்லோரும், அந்த கவிதை மொழிபெயர்ப்பில், சொல்லி வைத்த மாதிரி சில சொற்களை மட்டும் கலைத்துப்போட்டு எழுதிக்கொண்டிருக்க, Ben Belitt 1961 யில் அன்றைய அமெரிக்காவின் புதிய மொழியில், ஸ்டைல்லிஷாக மொழிபெயர்க்கிறார். அந்த சொற்கள் திரும்பி பார்க்க வைக்கின்றன.
4. Ben Belitt:
It so happens I'm tired of just being a man.
I go to a movie, drop in at the tailor's—it so happens—
feeling wizened and numbed, like a big, wooly swan,
awash on an ocean of clinkers and causes.
A whiff from a barbershop does it: I yell bloody murder.
All I ask is a little vacation from things: from boulders and woolens, from gardens, institutional projects, merchandise
eyeglasses, elevators—I'd rather not look at them.
water என்பதை ocean ஆக்குகிறார்.
swan of felt - a big wooly swan
bloody murder, institutional projects என்பதாக சொற்களைக் கொண்டு அலங்கரிக்கிறார். கவிதையின் Paraphrase structure, மொழிநடையில் dynamic equivalence எல்லாம் கொடுத்து கவிதையை வேறு தளத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார். இவரை பின்தொடர்ந்து Merwin, Bly போன்றோரும் செய்கிறார்கள்.
நெருடா உயிருடன் இருந்தவரை, தனது ஸ்பானிஷ் கவிதைகளின் முழுமைக்கு எந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் ஈடில்லை என்று சொன்னார். அவரே ஆங்கிலம் அறிந்தவர்தான். Blake யையும் Whitman யையும் விரும்பி வாசித்தவர்தான்.
எனக்கு, William O'Daly யின் மொழிபெயர்ப்பு பிடிக்கும். அவர் மொழிபெயர்த்த பாப்லோ நெருடாவின் கவிதைகள் எட்டு தொகுப்புக்களாக வெளிவந்திருக்கின்றன. Daly, நெருடாவின் இறப்புக்குப் பின்னரே (1973), 1980, 90களில் தான் நெருடாவின் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்குகிறார். ஆனால் அவர் இந்த Walking Around கவிதையை மொழிபெயர்க்கவேயில்லை.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....