Skip to main content

Posts

Showing posts from November 19, 2023

அறவி புதினம் குறித்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு - முனைவர் பெண்ணியம் பிரேமா

 அறவி: ஓர் பார்வை  காணொளி லிங்க்: அறவி : ஓர் பார்வை அறவி புதினம் குறித்த புத்தகத் திறனாய்வு - இணைய நிகழ்வு, வாருங்கள் படிப்போம் குழுவினரால் நிகழ்ந்தது நேற்று (18.11.2023, 7.30 pm)  அறவி குறித்த கதைக்களத்தை விவரித்த முனைவர் பிரேமா அவர்கள், கதையின் பாடுபொருளை, கதை அமைப்பை, கதைக்களங்களான திருச்செந்தூர் மற்றும் இங்கிலாந்தில் நார்தம்ப்டன் சூழல் விவரிப்பின் நேர்த்தியையும் வெகுவாக பாராட்டினார்.  பெண்களின் இன்றைய நிலைப்பாடுகள், பெண்ணியத்தின் புதிய சிந்தனைகள் என்று நேற்றைய அறவி புத்தகத் திறனாய்வின் பக்கங்களை, அவற்றை நோக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் மேடையாக்கி, 'பெண்ணியம்' பிரேமா அவர்களால் அருமையாக மாற்றிக்கொடுக்க முடிந்தது வியப்பே.  இந்த புதினத்தின் தலைப்பால், அறவி என்பது இல்லறத்துள் பெண் துறவைக் குறிக்கும் சொல்லாக மாறியிருப்பதாக அவர்கள் உரைத்தபோது மகிழ்வாக இருந்தது.  பெண்ணின் உடலியல் பிரச்சனைகளைப் பேசும் ஒரு புதினத்தால், அவளின் வெளியழகை பேசாமல், அவளின் அகத்தை மட்டும் பேசியிருப்பது, பெண்ணை முன்னிலைப்படுத்திய புதினங்களில் என் பார்வையில் இதுவரை யாரும் இவ்வாறு எழுதிய...