Skip to main content

Posts

Showing posts from August 20, 2023

அறவி நாவல் : ஓர் அறிமுகம்

  அறவி நாவல்  (உரை: கவிஞர் நித்யா) அறவி புத்தகம் வாங்க, அறவி கவிஞர் நித்யாவின் அறவி புதினம் குறித்த உரைக்குள் 'பெண்ணின் சுயம்' குறித்த ஒரு நீண்டதொரு அலசல் நிகழ்கிறது. இத்தனை அதிகமான கதாபாத்திரங்கள், பெண்ணின் உடலரசியல், குடும்ப அமைப்பு, ஆண் தோழமை என்ற பலவித அடுக்குகளுக்குள் இருக்கும் என்னுடைய 'அறவி' புனைவுக்குள் அநாயாசமாக சுயத்தைத் தேடியிருக்கிறார் உரையாசிரியர். அகம் சார்ந்து இயங்கும் பெண்களை அடையாளப்படுத்துகிறார். புனிதம் குறித்த அர்த்தப்படுத்துதல் சிறப்பு. 'வசந்த காலத்திற்குத் தயாராகும் இலையுதிர்க்காலம் போல' என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிகழ வேண்டிய உணர்வு இதுதான் என்பதை புதினம் சுட்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். நன்றிங்க நித்யா.  "விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே"  எனும் பாரதியின் குரலை,  அறவியின் ஒற்றை குரலாய், நான் பதித்திருப்பதையே, 'விடுதலையாகி நிற்பாய்' என  இவ்வுரைக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் நித்யா அவர்கள்.  அறவி புதினம் குறித்த ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொரு பார்வையை நான் உள்வாங்குகிற...