Skip to main content

Posts

Showing posts from November 20, 2022

நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க

  நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க (சிறுகதை) 1 புகைந்துக் கொண்டிருக்கும் தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றினாள். கடுகு, உளுந்து போட்டு தாளித்து கருவேப்பிலையைத் தேடும்போது, அது இல்லாதது நினைவில் வந்தது அமுதவல்லிக்கு. ‘வேதா’ என்றாள் சத்தமாக. பதிலே இல்லை. அடுப்பை அணைத்துவிட்டு, இங்கேதானே படிச்சுகிட்டு இருந்தா என்ற நினைப்புடன் ஹாலுக்கு வந்தபோது, வெளிச்சமற்ற மூலையில் அமர்ந்து,வேதா கணக்குடன் சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள்.  ‘ஏய்ய்.. நான் கூப்பிட்டது காதில் விழலயா என்ன..’  ‘அட போக்கா.. நான் படிக்கும்போதுதான் உனக்கு ஏதாவது வீட்டில் இல்லைன்னு தோணும்..’ தலை நிமிராமல் பேசினாள். வேதா வளர்ந்து வருவது இவளுக்குள் பயத்தை உண்டுபண்ணியது. எட்டு வயசிலேயே எடுப்பாய் இருப்பதாக பட்டது. ‘சுதர்சன் கடை வரைக்கும் போய், கருவேப்பில வாங்கிட்டு வாடி..’ என்று கெஞ்சலாக சொல்ல வெடுக்கென எழுந்து சென்றாள் வேதா. அடுத்த மாசம் முதல் நாமளும் நம்ம கடையில் காய் எல்லாம் வாங்கிவச்சுட்டா தன்னை பார்த்து பல்லிளிக்கும் ராஜுவின் முன் போய் நிற்க வேண்டியிருக்காது என்று நினைத்துக்கொண்டாள். ‘காலையில் எழுந்து குடிக்கபோன அந்த ஆள...

பெரிய மீசை

 பெரிய மீசை  (சிறுகதை) 1 கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம் வரும்வரை. பள்ளியில்லாத ஒரு சனிக்கிழமை. மதியம் கடந்த நேரம். கதவிடுக்கின் சிறுவெயில் கீற்றை கிழித்து சர்ரென்று வந்து விழுந்தது அந்த கடிதம்.  தபால்காரர் சண்முகம் எப்போதும்  இப்படிதான். முன்கேட்டின் உள்தாழ்பாளை தனது மெலிந்த கை நுழைத்து திறந்து, நீண்ட நடைபாதையைக் கடந்து, இருபுறமும் திண்ணை பிரித்து கிடக்கும் பரந்த படிகளில் ஏறிவந்து, கதவின் கீழிடுக்கு வழியாய் தள்ளிவிட்டுப்போவார். பெரிய தபாலாக இருந்தால், கதவின் பிடிதேய்ந்த, உருண்டையான வெளிவளைவை தட்டுவார்.  ஹாலில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த நான் எழுந்துபோய் எடுத்துவந்தேன். இருள் அறை முழுவதும் அப்பிக் கிடந்தது. அம்மாவைத் தேடினேன். ஹால் கடந்து, திறந்திருந்த தாழ்வாரம் ஒட்டியிருந்த, சந்திரன் அண்ணாவின் அறைவாசல் படியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். அண்ணா அமெரிக்காவிருந்து வரும்போது மட்டுமே அந்த அறை பயன்பாட்டில் இருக்கும். இந்த முறை வந்திருந்தபோது அவனின் ...

தார்மீகம்

 தார்மீகம்  (சிறுகதை ) அந்த ரயில் நிலையத்தின் நடைபாதை காலியாகவே இருந்தது. இரவின் வெளிச்சங்கள் விளக்குகளாய் தூங்கிக்கொண்டிருந்தன. வழக்கமான இணைப்பு நாற்காலிகளுடன் அவற்றின் அடியில் உறங்கும் நாய்களுடனும் அமைதியாகவே இருந்தது அந்த நகரத்து ரயில் சந்திப்பு. இன்னும் கோயம்புத்தூருக்கான ரயில் வர ஒரு மணி நேரம் இருக்கிறது. டிராலியை கீழே வைத்துவிட்டு, தோளில் தொங்கிய கைப்பையை கைக்கு மாற்றிக்கொண்டு நின்றேன். நடைபாதை நீண்டு, நடக்கலாமே என்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் காத்திருக்க, டிராலியின் அருகில் நிற்கும் அவசியம் இல்லாததாய் மனதுக்கு பட்டது. பழைய ரயில் நிலையங்களைப் பார்க்கும் போதெல்லாம் இது போன்றதொரு ஆசுவாசம் ஏற்படுவதுண்டு. எதுவும் வேகமாக நடக்காது என்பது போலவும், பழகிய தோற்றம் கொண்டதாகவும், பால்யத்தில் பார்த்த ஊரிலிருக்கும் ரயில் நிலையம் போன்றே மனதுக்கு நெருக்கமாக இருப்பது போலும் ஒரு தோற்றம் கொடுக்கும். சுற்றும்முற்றும் பார்த்தபோது, அந்த ரயில்நிலையம் மற்ற நிலையங்களை விட ஏதோ ஒரு வகையில் வித்தியாசபட்டு நிற்பதாய் தோன்றியது. நீண்ட நடைபாதை முழுமையும் இரும்புக் கம்பிகள் நேர்குத்தாய் நிற்க, ...