சௌமா விருது 2021 2021 க்கான சௌமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவ்வை நாவலுக்காக நான் விருது பெறுவது பெரும் மகிழ்வே. விருது வழங்கும் விழா அக்டோபர் 30 ஆம் தேதி மணப்பாறையில் நடைபெறுகிறது. சௌமா கல்வி நிர்வாக குழுமத்திற்கும் விருது குழுவினருக்கும் எனது நன்றியும் மகிழவும். அதன் அழைப்பிதழ் இங்கே : தவ்வை நாவல் வெளிவந்து இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திருப்பூர் இலக்கிய விருது தவ்வை புதினத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இப்போது சௌமா விருது. தவ்வை அனேக மதிப்புரைகளையும் பெற்றிருப்பது சிறப்பே. முனைவர் பெண்ணியம் இரா பிரேமா, உரையாளர் சரவணன் மாணிக்கவாசகம், பெண்ணியச் செயல்பாட்டாளர் குறிஞ்சி அமைப்பின் நிர்வாகி பேரா சுபசெல்வி, பேரா விஜயராணி, ஷீலா சிவகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். அந்த உரைகளை கட்டுரைகள் பகுதியில் பகிர்ந்துள்ளேன். வாசித்துக்கொள்ளலாம்.