தவ்வை நாவல் கொரொனா காரணமாக வெகு மாதங்களாக வெளிவர முடியாமல் தாமதமான என்னுடைய முதல் நாவல் தற்போது வெளிவந்துள்ளது. டிஸ்கவரி புக் பேலசின் வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ 250 மட்டும்.. டிஸ்கவரியின் ஆன்லைன் லிங்க் இதோ : தவ்வை இங்கு சென்று புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். தவ்வை என்றால் கொற்றவை, பெண் தெய்வம். என்னுடைய முன்னுரையில், "பிட்டம் பருத்து, கைகள் பலவுடன் நிற்கும் கொற்றவையைக் காணுங்கால், விழைவொன்று கொள்கிறாள். அவளிடத்தில் போகவும் அல்லது அவளாகவே மாறவும் ஆன விழைவு அது. அவள் வாழ்ந்த காலத்திலோ, அவளின் வாழ்விலோ அவளிடத்தில் நாம் வாழ்ந்தால் என்னவெனவும் யோசிக்கிறாள். அவளின் கால் அழல்களுக்கு கொத்தாய் குங்குமமிட்டு, இரத்தப்பிழம்புடன் ஆன உடலை அவளுக்கு அர்ச்சித்து, கச்சை இறுக்கிய அவளின் மார்பகங்களில் பெருங்காடுண்டு உறைந்து வாழ்ந்துவிட இன்றைய பெண்ணும் ஏங்குகிறாள். இந்நிலைதான் பெண்ணென பெரிதாய் சொல்கிறது. இக்கூற்றில் வடிந்து பிறந்த பெண்ணே தவ்வை என்னும் இப்பெருஞ்சித்திரத்தின் நாயகி. " எழுத்தாளர் திரு சு வேணுகோபால் அவர்களின் அணிந்துரையில், "ப...