ஆண்கள் தினம் ஆண் ! சக மானுடன் ! பெண்ணுக்காய் சலிக்காமல் மாற்றம் காணும் ஜீவன் ! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்து ஆண் என்பவன், ஆணாக, தலைவனாக, அகம் பெரிது உடையவனாக, பெண்ணைத் தனக்குள் ஒளித்து வைத்து பாதுகாப்பவனாக இருந்தான். குழந்தைகளை விட்டு பெரிதும் தள்ளி நிற்பவனாக, வீடு குழந்தைகள் என்பதெல்லாம் பெண்ணின் துறைகள் என்ற நினைப்பு உடையவனாக இருந்தான். இங்கு பெண் ஒரு பேசாமடந்தையாகவே இருந்தாள். அறுபதுகளில் எழுபதுகளில் பிறந்த ஆண், பெண் மீதான ஆதிக்கப் பார்வையைச் சற்று தளர்த்தியவனாக இருந்தான். இருந்தும் பெண்ணைக் கவனப்படுத்திக் கொண்டே இருந்தான். குடும்பத்திற்காகத் தன்னை இழைத்துக்கொள்ளும் தியாகத் திருவுருவாக நின்றான். பெண் உழைத்து வந்தாலும் குடும்பம் அவனின் பார்வைக்குள்ளே தான் உழன்று வந்தது. பெண்ணும் அவனுள் பல நேரங்களில் பொருந்தியும் சில நேரங்களில் எதிர்த்தும் நின்று போராடினாள். எண்பது, தொண்ணூறுகளில் பிறந்த ஆண், பெண் என்னும் பார்வையை முற்றிலும் மாற்ற முயற்சிப்பவனாக, சக உயிராய் அவளை நேசிக்கக் கற்றுக்கொள்பவனாக, வீட்டுவேலைகளைப் பகிர்ந்துக் கொள்பவனாக, குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவனாக, பெண் எ...