Skip to main content

Posts

Showing posts from December 24, 2017

புதுவருட கொண்டாட்டங்கள்

கவனமாக கொண்டாடவும்  மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனமாக ஏன் ஓட்டுவதில்லை என்னும் கவலை தொற்றிக்கொள்ளும் போது, இந்நிகழ்வு பெரிதாய் மனதுள் வருத்தம் தராதது போல் இருந்தது. காரணம் அந்த செய்தியின் தலைப்பிலேயே இருந்தது, விபத்து நடந்த இடம் 'Pub', அப்புறம் அது ஒரு நள்ளிரவு கடந்த 'Birthday Party' என்பதுமாக இருக்கலாம். Pub, Party என்பதெல்லாம் நம் கலாசாரத்திற்கு தேவைதானா என்ற கேள்வியும் அதன் தொடர்ச்சியாய் தோன்றும் அதில் பங்கேற்கும் மனிதர்கள் மேல் நமக்கு ஏற்படும் ஒட்டாத தன்மையும் ஆகும். கோவில்களில் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தில் ஏற்படும் நெருக்கடியால் மிதிபட்டு (Stampede ) ஏற்படும் உயிர் இழப்புகள், புது பட ரிலீஸ் அன்று டிக்கெட்டு எடுக்க உண்டாகும் நெரிசலில் நேரும் இழப்புகள் இப்படி எத்தனை.. 2015 யில் மெக்கா புனித தளத்தில் நெரிசலில் இறந்த 2000 உயிர்கள் இன்னும் உலகத்தின் நினைவில் நிற்கும்.. மனிதர்கள் அதிகமாய் கூடும் இடங்களில் ஏற்படும் இம்மாதிரியான உயிர் இழப்புகள் ஒரு பெரிய சங்...