நேற்று அம்மாவொருத்தி தன் சிறு பெண் Big Boss என்னும் ஷோவைப் பார்த்து, 'அந்த ஆண்டிக்கு பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு சரியாவே பதில் சொல்லத் தெரியலை'ன்னு சொல்லி அவளே பதில் சொன்னதைப் பெருமையாகச் சொன்னபோது, மனம் நொந்து போனேன். இந்த ஷோ குறித்து வாக்கிங், காய்கறி, டெய்லர் கடை, ஆஸ்பத்திரி என்று எங்கு போனாலும் மக்கள் பேசுறாங்க. முகநூலில் வாட்ஸ் அப்பில் என்று இங்கும் அதே பேச்சாக இருக்கு. மேற்கத்திய நாடுகளில் எடுப்பது போல், இது மாதிரியான ரியாலிட்டி ஷோ எடுத்து TRP ரேட்டை உயர்த்தி காசு சம்பாதிக்கவும் புகழ் பெறவும் நம்மூர் தொலைகாட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டு இது. கமலஹாசன் அதில் வந்துவிட்டால் அது ஒரு பெரிய உன்னதமா? நமிதா இருப்பதால் அது என்ன ஆண்களின் சுகவாச ஸ்தலமா? ஒருவருடைய பர்சனல் விஷயங்களைக் கிசுகிசுவாக்கி விற்கும் மீடியாக்கள் இப்போது அவர்களின் பாத்ரூம் வரை எட்டிப்பார்க்கும் உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன. இதைப் பார்க்கும் நம் குழந்தைகள் அடுத்தவர்களின் வீட்டு சாவி துவாரங்களைக் கேமரா கண்ணாக எண்ணி வேடிக்கை பார்க்கத் துணிந்துவிடும். தயவுசெய்து இம்மாதிரியான பணத்திற்காக தன் ச