Skip to main content

Posts

Showing posts from April 23, 2017

காதலே கவிதை - அம்ரிதா ப்ரிதம்

அம்ரிதா ப்ரிதம் (1919 - 2005) காதலை கடக்க நேர்ந்த எவரையும் அது விட்டுவைப்பதில்லை. அலைகழிக்க செய்து உவகை, அழுகை, ஆத்திரம், மௌனம், இறப்பு என்னும் கலவைகளுக்குள் உலர்த்தி எடுத்து அடங்குகிறது. காதலைக் கொண்டாடும் கலாசாரங்களில் அதை தூய அன்பென்றும் காதலித்தவனையே கைப்பிடிப்பவள் பாக்கியசாலியென்றும் அதை இழந்தவர்கள் அபாக்கியவாதிகளாகவும் தன்னையே மாய்த்துக் கொள்பவர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறது. கலாசார காலகட்டங்கள் மாறிய காலத்தில் காதலும் பல அவதானிப்புகளுடன் பயணிக்கத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞர் அம்ரிதா ப்ரிதம் அவர்களின் வாழ்க்கையை சற்று காதலின்பால் நோக்க நேரம் கிடைத்தது. அவர் காலத்தில் வாழ்ந்த சக பெண்களை விட மிகுந்த தைரியமும் தன்னுயர்வும் கொண்டவர். சிறு வயதிலேயே தாயை இழந்து, திருமணமும் முடித்து வைக்கப்பட்டது. லாகூரில் வசித்து வந்தார். அவரின் இளம்வயது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை சந்தித்திருந்தது. அந்த காலகட்டத்தில் நடந்தவைகளை பஞ்சாபி மற்றும் இந்தியில் கவிதையாய் தொகுத்திருந்தார். அவை மிகவும் பிரபலமானவை. அவரின் கவிதைகள், நாவல்கள் போன்றவற்றிற்கு,  Sah...

மூணாறு தேயிலை தோட்டத்து பெண்கள்..

போராட்ட களம்.. கேரள மாநிலத்தின் மூணாறு தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகள் 2015 யில் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். அந்த காலகட்டத்தில் அவர்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்களின் ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு குறித்தும் கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணி மிகவும் மோசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர் அந்த பெண்கள். அவர் அரசு அதிகாரிகள் மீதே ஒழுக்கம் சார்ந்த குற்றம் சுமற்றியதாகவும். ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு போராட்டம் நடந்த காலகட்டத்திலும் இம்மாதிரியான ஒழுக்க சீர்கேடான விஷயங்கள் நடந்ததாக மட்டுமே அமைச்சர் கூறியதாகவும் அவரின் மலையாள பேச்சின் தமிழாக்கம் சுட்டுகிறது. https://thetimestamil.com/2017/04/24/கேரள-அமைச்சர்-தமிழ்-பெண்/ கேரளா, கம்யூனிசம் பேசும் குதர்க்கவாதிகளை (Critical Thinkers(!) என்றும் சொல்லலாம்) கொண்ட பிரதேசம். இந்த கம்யூனிசம் என்பது பொதுவியலை பேசும் ஓர் அமைப்பு. கம்யூனிஸத்தில் புழங்கிவரும் ‘தோழமை’, ஆண் பெண் என்னும் பா...