நூல் : நாராய்... நாராய்... சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் : ஆட்டனத்தி வெளியீடு : New century book house. July 2016 விலை : ரூ 115 (கோவை இலக்கிய சந்திப்பில் நான் உரையாற்றியது) நூல் மதிப்புரை புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதைகள் பற்றி சொல்லும்போது , " கதையை வாசிப்பது , நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை" என்கிறார். இத்தொகுப்பிலும் அவ்வாறே அமைந்து கதையை படித்து முடிந்த பிறகு நமக்குள் அசை போட தூண்டுகிறது. இத்தொகுப்பின் தலைப்பிலேயே அதன் சாராம்சம் இருக்கின்றது. இயற்கை, வனம், வனம் சார்ந்த உயிரனங்கள், பறவைகள் இவற்றை முதன்மைபடுத்தியிருக்கிற நூல். ஆசிரியர் ஆட்டனத்தி அவர்கள் வனத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் என்பதால் வனத்தை பிராதானப்படுத்திய எழுத்துகள் இந்நூலில். அய்யா அவர்களின் முந்தைய சிறுகதை தொகுப்பான பசுமை வளையம் நூலிலும் வனம் சார்ந்த வாழ்க்கை, அவற்றோடு உ...