தேடல்..
முடிந்த முதலிரவுக்குப்பின்
புள்ளி போட்ட படுக்கை விரிப்பில்
தேடிக்கொண்டிருக்கிறான்
இரத்தத்தின் சுவடுகளை,
புதிது புதிதாய்
நிறமற்ற விந்தினை
உருவாக்குபவன்..
நிறமில்லா படலம்..
மை இட்டாயிற்று
சிகை அலங்காரம் முடித்தாயிற்று
தொங்கட்டான்கள்
அட்டிகை, கொலுசு மணிகளோடு
பூட்டியாயிற்று
கொள்ளை அழகென்ற,
அம்மாவின்
தங்கையின்
தம்பியின்
வார்த்தை பொய்களில்
மயங்கியாயிற்று
சிரிப்புடன்
விளம்பரமாய்
வந்து நின்றபோது
மாப்பிள்ளை முகம் சுளித்தான்
நிறம்
போதவில்லையாம்..
~ அகிலா..
வேதனை வரிகள்
ReplyDeleteஆமாம் .. நன்றி
Deleteஇப்படி பட்ட கவிதைகள் சொல்லும் கருத்துகளை அறியும் போது இப்படிப்பட்ட இழிவான ஆண் ஜென்மத்தில் பிறந்துவிட்டோமே என்று நினைக்க தோன்றுகிறது...
ReplyDelete