பிக் பாஸ்
~ அகிலா..
எழுதிவைத்து நடத்தப்படுகிறதோ எழுதாமலே நடத்தப்படுகிறதோ, எதுவாகினும் மனித உறவுகளை வைத்து பின்னப்படும் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன பிக் பாஸில்.
நிஜத்தில், இம்மாதிரி நடந்தேற நாட்கள் பிடிக்கலாம். இன்னும் பல சூழல் சிக்கல்கள் இடைபுகலாம். அதிகமான மனிதர்கள் உட்புகலாம்.
அதுமாதிரி அல்லாமல், குறிப்பிட்ட சூழலுக்குள், எண்ணிக்கையில் சிறியதான நபர்களிடையே நடைபெறுவதால், அவரவர் இயல்புகளுடன் கலந்து, அதனுடன் எழுதி இயற்றப்பட்டவையும் சேர்ந்து சீக்கிரம் அரங்கேறுகின்றன. பொழுதுபோக்குக்கான சிறப்பாய் தெரிகின்றன.
சீரியல் என்னும் நெடுந்தொடரை விட இது சட்சட்டென்று, முடிவுகள் முகமாற்றங்களுடன் வெளிபடுவதால், மக்கள் அதை பார்ப்பதை விடுத்து, இதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் ஒருவகையில் நல்லதே. யாரை எப்படி விஷம் வைத்து கொல்வது என்று பத்து நாட்களாய் திட்டமிடுதல் குறைக்கப்படுகிறது.
இதிலிருக்கும் கதாபாத்திரங்கள் தங்களை மற்றும் தங்களைப் போன்றோரை ஒத்திருப்பதால் சுலபமாய் அந்த வீட்டிற்குள் இவர்களாலும் அவர்களுடன் வாழமுடிகிறது. தாங்கள் திரையில் பெரிதாய் உருவகப்படுத்தி பார்த்த யாரும் நம்மை விட மேம்பட்டவர்கள் இல்லையெனும் சமாதானமும் பிறக்கிறது.
தவறேதுமில்லைதான். இருந்தும், ஒரு பெரிய மனசிக்கல் உள்ள வாழ்க்கை முறையை நமக்கு இது காட்டுகிறது. உளரீதியான பிரச்சனைகள் சில மட்டுமே அலசப்பட்டு, அதுவும் கூட சரியான முறையில் தீர்வு எட்டப்படாமல் ஆங்காங்கே மூடப்பட்டு, செய்பவர்கள் வெளியேற்றப்பட்டு, கிட்டத்தட்ட கருவினுள் இருந்து காது கொடுத்து கேட்டும் முழுமையடையாமல், போர் வியூகத்தின் நடுவில் உயிர்துறந்த அபிமன்யுவை நினைவூட்டவும் அச்சமூட்டவும் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
#பிக்பாஸ்
#BigBoss
#Big_Boss
ஒருவகையில் நல்லதே... ஆனால்...
ReplyDeleteதிட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்..
திருடும் கையைக் கட்டி வச்சாலும்...
தேடும் காதைத் திருகி வச்சாலும்...
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்...
மாறாதய்யா மாறாது...
மனமும் குணமும் மாறாது...
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்...
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…
மாறாதய்யா மாறாது...
மனமும் குணமும் மாறாது...
- கவிஞர் கண்ணதாசன்
இன்றைக்கு தமிழ் நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது பிக்பாஸ்தான்.
ReplyDeleteஇது எதில் கொண்டு போய் விடுமோ...?
- கில்லர்ஜி