81வது கோவை இலக்கிய சந்திப்பு
கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூடல் அரங்கில் இனிதே நடந்தது.
நூல் வெளியீடு
'கனவு' சுப்ரபாரதி மணியன் அவர்களின் 'The Hunt', 'The Lower Shadow' என்ற இரண்டு ஆங்கில நூல்கள் வெளியீடு நடைபெற்றது.
பொன் இளவேனில்
அகிலா
மறைந்த கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் அவர்களின் படைப்புகள் குறித்த அறிமுகம் என்னால் செய்யப்பட்டது. அவரின் கவிதைகள் குறித்து பொன் இளவேனில் அவர்கள் உரையாற்றினார்.
தாரணி
ப்ரிதிவிராஜ்
சுப்ரபாரதி மணியன் அவர்களின் ஆங்கில நூல்கள் குறித்து, பேராசிரியர் தாரணியும், கேர் அறக்கட்டளையின் ப்ரிதிவிராஜ் அவர்களும் உரையாற்றினார்கள்.
அவைநாயகன்
புன்னகை ரமேஷ்குமார்
புன்னகை ரமேஷ்குமார் அவர்களின் 'யாவர் மீதும் முளைத்திருக்கும் தாவரங்கள்' என்னும் கவிதை நூல் குறித்து அவைநாயகன் அவர்கள் உரையாற்றினார்கள்.
சோலைமாயவனின் 'வழியும் குரலற்றவனின் செங்குருதி' கவிதை நூல் குறித்து இளஞ்சேரல் அவர்கள் உரையாற்றினார்கள்.
சுப்ரபாரதி மணியன்
அன்புசிவா
இளஞ்சேரல்
சோலைமாயவன்
அம்சப்ரியா
புன்னகை ரமேஷ்குமார், சுப்ரபாரதி மணியன் சோலைமாயவன் ஆகியோரின் ஏற்புரையும் அன்புசிவா அவர்களின் சிற்றுரையும் அருமை.
கவிஞர் அம்சப்ரியா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.
~ அகிலா..
மகிழ்ச்சிக்குரிய செய்தி.
ReplyDelete