Skip to main content

பிக் பாஸ் - குழந்தைகளைக் கெடுக்காதீங்க

 
நேற்று அம்மாவொருத்தி தன் சிறு பெண் Big Boss என்னும் ஷோவைப் பார்த்து, 'அந்த ஆண்டிக்கு பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு சரியாவே பதில் சொல்லத் தெரியலை'ன்னு சொல்லி அவளே பதில் சொன்னதைப் பெருமையாகச் சொன்னபோது, மனம் நொந்து போனேன்.

இந்த ஷோ குறித்து வாக்கிங், காய்கறி, டெய்லர் கடை, ஆஸ்பத்திரி என்று எங்கு போனாலும் மக்கள் பேசுறாங்க. முகநூலில் வாட்ஸ் அப்பில் என்று இங்கும் அதே பேச்சாக இருக்கு.

மேற்கத்திய நாடுகளில் எடுப்பது போல், இது மாதிரியான ரியாலிட்டி ஷோ எடுத்து TRP ரேட்டை உயர்த்தி காசு சம்பாதிக்கவும் புகழ் பெறவும் நம்மூர் தொலைகாட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டு இது.

கமலஹாசன் அதில் வந்துவிட்டால் அது ஒரு பெரிய உன்னதமா? நமிதா இருப்பதால் அது என்ன ஆண்களின் சுகவாச ஸ்தலமா? ஒருவருடைய பர்சனல் விஷயங்களைக் கிசுகிசுவாக்கி விற்கும் மீடியாக்கள் இப்போது அவர்களின் பாத்ரூம் வரை எட்டிப்பார்க்கும் உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.



இதைப் பார்க்கும் நம் குழந்தைகள் அடுத்தவர்களின் வீட்டு சாவி துவாரங்களைக் கேமரா கண்ணாக எண்ணி வேடிக்கை பார்க்கத் துணிந்துவிடும். தயவுசெய்து இம்மாதிரியான பணத்திற்காக தன் சொந்த வாழ்க்கையை விற்கும் உப்பு சப்பாணி நடிகர்களுக்காக உங்களின் குழந்தைகளின் வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்.

விரிந்து பரந்த உலகம் அவர்களுடையது. அதில் சக மனிதர்களும் பறவைகளும் மிருகங்களும் மரங்களும் செடி கொடிகளும் நீர்நிலைகளும் காற்றுவெளியும் நிலப்பரப்பும் அடக்கம். அதை கற்றுக்கொடுங்கள். கேமராவின் பார்வைக்குள் நாலு சுவர்களுக்குள் அடைந்திருக்கும் மூச்சுமுட்டச் செய்யும் இந்த போலி வாழ்க்கையை அவர்களுக்குக் காட்டாதீர்கள் பெற்றோர்களே.

இவற்றையெல்லாம் புறக்கணித்து பாடம் கற்றுக்கொடுப்போம், பர்சனலை விற்று பணம் பண்ணும் நடிகர்களுக்கும் அதை விளம்பரபடுத்தி காசு பார்க்கும் டிவிகாரர்களுக்கும். குறைந்தபட்சம் குழந்தைகளின் உலகத்தையாவது இவற்றை கொண்டு சித்தரிக்காமல் இருப்போம்.

Comments

  1. கேமராவின் பார்வைக்குள் நாலு சுவர்களுக்குள் அடைந்திருக்கும் மூச்சுமுட்டச் செய்யும் இந்த போலி வாழ்க்கையை அவர்களுக்குக் காட்டாதீர்கள் பெற்றோர்களே

    உண்மையான கருத்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. Casinos in Malta - Filmfile Europe
    Find the best Casinos in deccasino Malta including bonuses, games, games and the history of games. We 토토 사이트 cover all the main ventureberg.com/ reasons to 메이피로출장마사지 visit Casinos 출장샵 in

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...