Skip to main content

Posts

Showing posts from March, 2017

நீயா நானா

பெண்களும் அம்மாக்களும்  நீயா நானா என்னும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகளுக்கும் அவர்களின் அம்மாமார்களுக்குமான விவாதம்.  பிள்ளைகள் தங்களுக்கு திருமணத்திற்கு 100 பவுன் நகை, கார் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்ததும் பெற்றோர் முழித்துக்கொண்டிருந்ததும் எல்லோராலும் பார்க்கப்பட்டது.  அதில் பேசிய பெண்பிள்ளைகளைத் தராசில் ஏற்றாதவர்கள் கிடையாது. பெற்றோரின், உடன்பிறந்தோனின் சிரமம் உணராது பேசியது அவர்களேதான். அதன்பின் படிந்திருக்கும் நியாயங்களைப் பற்றியும் நாம் பார்க்கவேண்டும். அவர்கள் தங்கள் பெற்றோர் மீது வைத்த முதலும் முடிவுமான குற்றச்சாட்டு, சிறுவயதில் இருந்தே சாப்பாடு, படுக்கை, படிப்பு என்பதில் தொடங்கி திருமணம் வரை தொடரும் ஆண், பெண்ணென்ற பால் பாகுபாடு. ஆண், பெண் பாகுபாடு பார்ப்பது பெரும்பான்மையான மத்தியதர குடும்பங்களில் வழக்கமான ஓன்று. பையனுக்கு திருமணம் முடித்துவைத்து அவனோடு இருக்கப்போகிறோம், அவன்தான் நம்மைக் காப்பற்றப் போகிறான் என்னும் பழைய நூற்றாண்டின் இந்திய சமூக கோட்பாடுதான் இதற்கு காரணம். இந்த கால சூழலில் பெண்ணுக்கு படிப்பு கொடுப்பது கட்டாயம், கௌரவமென ஆ

மகளிர் தினத்தில்..

ஆண்கள்  ‘என்னவெல்லாமோ எழுதுறியாம், உனக்கென்ன தெரியும் அதை பற்றி..’ – இது ஒரு கணவன் என்னும் ஆணின், மனைவி என்னும் பெண் குறித்த தெரிதலுக்கான கேள்வி என்றால், இல்லை என்பேன். ‘உனக்கு இது குறித்து ஒன்றும் தெரியாது. எதுக்கு லூசு மாதிரி எழுதுறே’ என்பதற்கான நாகரீக கேள்வி அது. மனிதர்களையும் மனித மனங்களையும் அவர்களின் வாழ்வியல் விஷயங்களையும் பற்றி சமூகவெளிகளில் பேச பெண்ணுக்கு அனுமதி இன்னும் முழுதாய் கிடைக்கவில்லை என்பது வருத்தமே. நிறைய மேடைகளில் பேசும்போது, ஆணுக்கு இணையாய் பெண்ணும் அமர்கையில் அவளுக்கு அந்த மேடையில் கிடைக்கும் மரியாதை தனித்துவம் வாய்ந்தது. அப்படியான பிரபலங்களைக் குறித்து வீட்டில் தன் மனைவியிடம், ‘எப்படி பேசுறாங்க...அருமை..’ என்று சிலாகிக்கும் ஆண்கள் உண்டு. சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘நீயும் இருக்கியே, எதுக்கெடுத்தாலும் மூக்கை வடிச்சுகிட்டு..’ என்று சொல்வதும் உண்டு. என் தோழிகளில் சிலர் அவர்களின் கணவர்களைப் பற்றி, ‘மரியாதை கொடுக்கிற மாதிரியும் மரியாதை கொடுக்காத மாதிரியும் இருக்கு..’ என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம், இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஆண்களுக்கு

மகளிர் தினத்தில்...

பிள்ளைகள்.. வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீடுகளில், வெளிவேலைகளையும் பார்த்துக்கொண்டு இணையதளங்களிலும் உலவிக்கொண்டு அவர்களின் அம்மாவாகவும் பவனி வருதல் எங்களைப் போன்ற பெண்களுக்கு மிகக்கடினம். ‘இன்னைக்குதானே இதை பார்க்குறே..’ (குர்தா போடுவதற்கு)  ‘என்ன இது...சின்ன பசங்க மாதிரி short form லே எல்லாம் பேசிக்கிட்டு..’  ‘உங்க வீட்டுக்காரர் (அவங்க அப்பாதான் !!) சரியில்லே..அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுட்டார்..’  ‘ஏதோ கவிதை கிறுக்குனோமா, சமையல் எழுதினோமான்னு இல்லாம எதுக்கும்மா இந்த அரசியல், ஜல்லிக்கட்டுன்னு கிறுக்கிட்டு...என் வீட்டுக்காரருக்கு பிடிக்கல...’ - மகளின் பொருமல்  ‘மைக்குல பேசுறதையெல்லாம் வீட்டுல பேசிகிட்டு..’ – மகனின் அலம்பல் ‘அதுக்கு ஒன்னும் தெரியாது, ஆனாலும் எப்போ பார்த்தாலும் வாட்ஸ்அப்பிலேயே இருக்கு...’ – பாட்டியைப் பார்த்து பேரன் இந்த பேச்சுகள் புதிதல்ல நமக்கு.. பெண்களை அம்மாவாக மட்டுமே பார்க்கும் குழந்தைகளின் கண்ணோட்டம் மாறவேண்டும். அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகள் கூட, அம்மாவை அவளின் வயது, அனுபவம் சார்ந்து பார்க்காமல் அவர்களின் வீட்டுக்காரரின் முன