21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) முனைவர் பூ மு அன்பு சிவா கோவை புத்தகத் திருவிழாவில் நடந்த இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டது. அன்று நான் செய்த மதிப்புரை 21 ஆம் நூற்றாண்டு நவீனக் கவிதைகளில் புதியப் போக்குகள் என்னும் தலைப்பில் ஆய்வுக்காக எடுத்த கட்டுரைகளை நல்லதோர் நூலாக்கி இருப்பதற்கு முனைவர் பூ மு அன்புசிவா அவர்களுக்கு என் வாழ்த்துகள். 2001 – 2005 வரை உள்ள காலகட்டத்தில் உள்ள புதுக்கவிதைகளை, அவற்றிலுள்ள நவீனத்துவப் போக்குகளை இதில் ஆய்வுக்காக எடுத்து தொகுத்துள்ளார். அதில் ஆதவன் தீட்சண்யா, அழகுநிலா, இரத்தின புகழேந்தி, தேவதேவன், மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி, கனிமொழி, குகை மா புகழேந்தி, மகுடேஸ்வரன், பிரான்சிஸ் கிருபா, தமிழரசி, இளம்பிறை இவர்களின் கவிதைகளை எடுத்திருக்கிறார். புதுக்கவிதை என்பது மரபு கவிதையின் செவ்வியல் முறையை உடைத்து உருவானதுதான் என்பது நம் எலோருக்கும் தெரியும். புதுக்கவிதையை மேற்கத்திய பாணியில் கு பா ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, சி சு செல்லப்ப...