Skip to main content

Posts

Showing posts from May 29, 2016

படிப்பும் ஒழுக்கமும்..

எங்கே போனாலும் நம்ம கண்ணுலேயே எல்லாம் படுது..எக்ஸாம் எழுத போன இடத்துல கூட.. எக்ஸாம் ரூமுக்கு முன்னாடி, கும்பலா கொஞ்ச பேர், தனியா தனியா கொஞ்ச பேர் இப்படி எல்லாம் உட்காந்து படிச்சுகிட்டு இருப்பாங்க. பார்த்திருப்பீங்க. அப்படி ஒரு கும்பல இரண்டு நாளா எக்ஸாம் ஹால்ல பார்த்துகிட்டு இருக்கேன். ஒரு ஆளு, ஆறு ஏழு பொம்பளங்க அல்லது பொம்பள பிள்ளைங்க (கல்யாணம் ஆனவங்களும் ஆகாதவங்களும்) வட்டம் கட்டி உட்கார்ந்து படிக்கிறாங்களோ இல்லையோ அரட்டை.. எல்லார்கிட்டேயும் உரசிகிட்டும் சிரிச்சுகிட்டும் பேசிகிட்டு இருந்தார் அந்த ஆளு. அவளுங்களும் அப்படிதான். வீட்டை விட்டு வெளியே வந்தா, வீட்டுக்காரரை மறந்துருவாங்க போல.. அதுல ஒரு பொம்பளை மட்டும் சிரிக்காம கொஞ்சம் உம்முனு இருந்தாங்க. அவங்க நடந்துகிறதுல இருந்தே தெரிந்தது, அவங்க அந்த ஆளோட மனைவின்னு. ரெண்டு பேரும் பரிட்சை எழுத வந்திருக்காங்க போல. மூணாவது நாளும் இப்படி கெக்கெபெக்கென்னு சிரிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு invigilator கட்டு பேப்பரோட வந்தாங்க. என்ன கடுப்பில இருந்தாங்களோ தெரியல, பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. 'இது என்ன பீச்சா..காத்து வாங்கவா வந்து...