ஒரு காலை வேளையில், மழையின் காரணமாய் வெளியில் வாக்கிங் போகமுடியாமல் மாடியில் நடந்துக் கொண்டிருந்தேன். சின்ன கார் ஒன்று வந்து எங்கள் ரோட்டில் நின்றது. அதிலிருந்து இறங்கிய மனிதர் கையில், ஒரு சிவப்பு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. அவரைப் பார்த்ததும் எங்க தெருவில் திரிந்துக் கொண்டிருக்கும் வால் மொட்டையான பிரவுன் கலர் நாய் ஓடிவந்தது. உடனே இவர் அந்த டப்பாவைத் திறந்து ஏதோ ஒரு மஞ்சள் நிற சாப்பாடை சாலையில் கொட்டினார். அதுவும் சாப்பிடத் தொடங்கியது. எனக்கு, என்னடா இது, எங்கிருந்தோ வந்து நம்ம ரோட்டில் சாப்பாடை கொட்டுறாறே என்று தோன்றியது. காருக்குள் ஏறி உட்கார்ந்துவிட்டார். சரி கிளம்பிவிடுவார் என்று பார்த்தால், எதையோ உள்ளிருந்து விரட்டிக் கொண்டிருந்தார். பட்டேன்று கதவு திறந்து இறங்கி கீழே இருந்து ஒரு கல்லை எடுத்து வீசி விரட்டிக் கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் அங்கே இன்னொரு தெரு நாய். அதுவும் இவரை நெருங்க, இவர் அதை விரட்ட, இந்த நாய் சாப்பிட்டு முடிக்கும் வரை இப்படியே காவல் காத்துவிட்டு அப்புறம் காரை கிளப்பிக்கொண்டு போனார். எல்லாமே தெருவில் உள்ள நாய்கள்தான். இந்த நாயின் மீது மட்டும் ...