Skip to main content

Posts

Showing posts from March 13, 2016

குழந்தைகளை குழந்தைகளாகவே..

ஒரு காலத்தில, நம்ம பாட்டி தாத்தா பேசிகிட்டு இருக்கும் போதெல்லாம், நாம நின்னு வாய் பார்த்தோம் என்றால், 'போ, அந்த பக்கம்ன்னு...' துரத்திருவாங்க.  அடுத்தது, நம்ம அம்மா அப்பா....அவங்க பேசும் போது, குறுக்கே பேசினால் (பேசுவோம்...அவ்வளவு வளர்ந்துட்டோம்னு காமிச்சுக்குவோம்...), 'பெரிய பொம்பளையாட்டம் பேச வந்துட்டான்னு ...' நம்மளை ஒதுக்கிருவாங்க. வேற வழி இல்லாம நாமளா அந்த இடத்தில் இருந்து நகந்திருவோம்.  என் பையனை வளர்க்கும் போது, எதை அவனை வச்சுக்கிட்டு பேசணுமோ, அதை மட்டும் பேசுவோம். மற்றதை அவன் இல்லாதப்போ பேசுவோம். அப்படி பெற்றோராக இருக்கோம்.. இப்போ அப்படியில்லை...சில பெற்றோர்கள் சின்ன குட்டிஸ் முன்னாடி எதையெல்லாம் பேசக்கூடாதோ (Always love you, I love U, Hug me )...., எதையெல்லாம் செய்யக்கூடாதோ (Hugging, Kissing )...அதையெல்லாம் செய்வது என்ற போக்கில் போகிறார்கள். இதை பார்க்கும் அந்த குழந்தைகள் பள்ளியில் போய் இவங்க செய்வதை அங்கு செயல்படுத்தும் போது, அது ஒரு பிரச்சனையாய் ஒழுக்கமின்மையாய் அங்கு பார்க்கப்படுகிறது. அதில் தவறில்லை.  இளம் தலைமுறையினருக்கு:...

சாலையெங்கும்

சாலையெங்கும் சாதிகள் இரத்த சிவப்பில் ஆடையுடுத்தி சுலபமாய் அரிவாள் சுழற்றி உடலுக்குள் சென்று திரும்பும் காற்றை பிரித்தெடுத்து மனிதத்தை சிதைத்து மனிதர்களை வேடிக்கை பொருளாக்கி நடுவீதியில் நின்று நகையாடியது மீதி உயிர், அது இன்னும், சாலையோரத்தில் பேருந்துக்காக..