சகுனியாய் சில ஆண்கள்.. பெண்களின் பலமும் பலவீனமும் குடும்பம் சார்ந்தே அமைந்துவிடுகிறது. பெண்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அதீத அன்பும் அக்கறையும் தான் இதற்கு காரணம். நிறைய குடும்பங்களில் ஆண்கள் இதை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நேற்று என் தோழி ஒருவர் போன் பேசியிருந்தார். மன உளைச்சலுடன் பேசினார். படித்தவர். மிகவும் யோசித்து எந்த செயலையும் செய்பவர். என்ன விஷயம் என்று வினவியபோது, சொல்லத் தொடங்கினார். எப்போதும் யோசித்து செயல்படும் அவரை, அவர் கணவர் குடும்பத்தில் சகுனி நீதான் என்று தன்னைச் சொல்லிவிட்டதற்காக நிறைய குறைப்பட்டுக் கொண்டார். சகுனி என்னும் ஒரு சொல் அவரை மிகவும் வேதனைபடுத்திவிட்டது. அதுக்காக ஏன் வருத்தபடனும்னு அவங்ககிட்டே கேட்டேன். சகுனி யோசித்து செயல்படும் திறன் வாய்ந்தவனாக புராணத்தில் காட்டப்பட்டவன். தனக்கான தர்மத்தை தானே வென்றவன். தன் தகப்பனின் எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட தாயம் உருட்டி, மகாபாரத போருக்கு வித்திட்டு, தருமத்தை ஜ...