மக்களும் பணமும்..
நமது இந்திய அரசின் புது பொருளாதார அதிரடி திட்டத்தின்படி, நவம்பர் 8ஆம் தேதி இரவிலிருந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டதும் 500 மற்றும் 2000 புது ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டதும்ந நாம் அறிந்ததே. இந்த பரிமாற்றம் நடந்து நாடு சமன் பெற அதிக நாட்கள் எடுக்கலாம்.
வங்கிகளில் இருக்கும் நம் பணமே நம் கைக்கு வந்து சேர ஆகும் தாமதமும் இதில் அடங்கும்.
பண மாற்றம் வந்த இந்த ஐந்து நாட்களில் கையிலிருக்கும் நூறு ரூபாய் தாள்களை அனாயாசமாக செலவழிக்காமல் பார்த்துக்கொள்ள நான் பட்ட கஷ்டம். பழையபடி சிக்கனத்துக்குள் நுழைந்திருக்கிறேன். முதலில் சிரமமாக இருந்தாலும் இந்த இரண்டு நாட்களாக பழகிவிட்டது.
சாலையின் ஓரத்தில் விரித்திருந்த கடையில் என்னை ஈர்த்த டெரகோட்டா பொம்மைகளை வாங்காமல் வந்தது.
ஆட்டோ பிடிப்பதற்கு பதில் நடந்துச் சென்றது.
மத்திய வர்க்கம் கீழ்வர்க்கம் என்னும் நிலை மாறி அனைவரும் சமமென தனி சலுகைகள் மறந்து வங்கிகளில் வால் பிடித்து நின்றது.
இதில் ஆட்டோ ஓட்டுனரும் கைவினைக்காரரும் பாதிக்கப்பட்டாலும் என் வீட்டிற்கும் உடம்பிற்கும் எண்ணங்களுக்கும் நல்லதைத்தானே செய்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.
சில நேரங்களில் சில விஷயங்களில் அதிரடிகளும் தேவையாகிறது, ஊருக்கு போயிருக்கும் மனைவி சடாலென வந்து நிற்பது போல... அது ஒரு இனிப்பும் உவர்ப்பும் கொண்ட விஷயம். ஏற்றுக்கொண்டு அந்த மனநிலைக்கு மாறுவதில்லையா..அதேபோலவே இதுவும்.
~ அகிலா..
அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றியும் அன்பும் அய்யா
Deleteநன்றியும் அன்பும் அய்யா
Deleteசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590