கள்ளிப்பால் கொடுத்த காலம் கொஞ்சம் கடந்து, குழந்தை திருமணங்களை எதிர்க்கும் தருணம் இது. வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பெண் குழந்தைக்கு பதினெட்டு வயதுக்குமுன் திருமணம் நடப்பதாக ஐக்கிய சபையின் அறிக்கை கூறுகிறது.
மத்தியதர குடும்பங்களில் இளவயது திருமணங்கள் குறைவு. பெற்றோர் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க போராடுகிறார்கள். அதனால் அங்கெல்லாம் வாழ்த்துகள் போதும்.
ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல குடும்பங்களில் பதினைந்து பதினாறு வயதில் பெண் பிள்ளைகளை மணமுடித்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.
உடலளவிலும் மனதளவிலும் வளர்ச்சியடையாத பருவம் அது. அந்த வயது திருமணம் என்பது எத்தனை பாதிப்புக்களை அந்த பெண்ணுக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் அவளைச் சார்ந்தோருக்கும் உண்டு பண்ணும் என்பது நாம் அறிந்ததே.
இம்மாதிரி குடும்பங்களில்தான் நம்மை போன்றோரின் உதவி தேவைப்படுகிறது. பெண்பிள்ளைகளை பெற்றவர்களிடம் பெண்ணை படிக்க வைக்க பேசுவோம். அதுவும், குறிப்பாய் அப்பிள்ளைகளின் தாய்மார்களிடம். அவர்களை சற்று ஊக்கப்படுத்தினாலே கடினப்பட்டு உழைத்து தன பெண்ணைப் படிக்கவைக்க முனைவார்கள். இது என் அனுபவம்.
சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்..
மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅனைவருக்கும் ’சர்வதேச பெண் குழந்தைகள் தின’ நல்வாழ்த்துகள்..
அருமையான பதிவு
ReplyDeleteall young girls should be given sex education when they reach nineth tenth standard
ReplyDeletethe biological physiological changes that occur to girls during adolescent period should be explained to them
young girls should be taught good touch bad touch...
all young girls should be given sex education when they reach nineth tenth standard
ReplyDeletethe biological physiological changes that occur to girls during adolescent period should be explained to them
young girls should be taught good touch bad touch...
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.. - முடிந்தவரை இளவயது திருமணங்களைத் தடுத்து, படிப்பை ஊக்கப்படுத்துவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து அதிகமாய் பேசுவோம். பேச பேசவே, சமூகம் நமக்கு காது கொடுக்கும்.
ReplyDeleteசர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்..- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Ahila Puhal