பெரியாரும் பெண் முன்னேற்றமும்
"ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும்."
பெரியார் அவர்கள் சொன்னபடி, படிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
"பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்."
அதுவும் சட்டமாகியிருக்கிறது.
"கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை."
அதையும் செய்துவருகிறோம்.
தந்தை பெரியார் சொன்ன, செயலாக்கிய, செயலாக்கம் பெற போராடிய, பெண் உரிமையை, விடுதலையை, கிட்டதட்ட நெருங்கிய பின்பும் சமூகத்தில் ஏன் இத்தனை பெண் சார்ந்த வன்முறைகள்?
தனக்கு எதிராய் பெண்ணை ஏற்றுக் கொள்ளமுடியாத ஆண்வர்க்கத்தின் நிலைபாடும் இதற்கு ஒரு காரணம்.
- இன்றைய ஆண் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள், அவர்களுடன் பழகும் பெண்பிள்ளைகளை, தோழிகளை, அவர்களுடன் பயிலும் சக மாணவிகளை, தன்னைவிட வயதில் மூத்த பெண்களை எவ்வாறு சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், எவ்வாறு அணுகவேண்டும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலையும், புரிவதற்கான வழிமுறைகளையும், பழகும் முறைகளையும் சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.
- பெரியாரிஸம் பேசும் பகுத்தறிவாளிகளும் அரைத்த மாவையே அரைப்பதை விடுத்து, சற்று அவரின் சிந்தனைகளை காலத்திற்கு ஏற்றார்போல், அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகவேண்டும்.
- பெண்மக்களின் முன்னேற்றம் மட்டுமல்லாமல், பாதுகாப்பு குறித்த விஷயங்களையும் சமூக அமைப்புகள், அரசியல்கட்சிகள் கணக்கில் கொள்ளவேண்டும்.
பெரியாரின் சிலைக்கு மாலையிடுவதோடு நிறுத்திவிடாமல், பெண் பாதுகாப்பில் அனைவரும் அக்கறை எடுத்தால், நாளைய சமூகத்திலாவது சுவாதிகள் இல்லாதிருப்பார்கள்..
arumai
ReplyDeleteji periar had targeted only brahmins those days.... but all the social evils like heavy dowry killings in case of intercaste marriages killing of old people to inherit properties child marriages high superstition cultures like breaking of coconuts on ones heads narabali etc DO PREVAIL not in BRAHMIN COMMUNITIES but only in other communities pl remember
ReplyDeleteagain the so called backward most backward class people like vanniars nadars gounders etc do not give up reservation facility to their caste people who are really poor..
the same thing applies to sc people...
i can quote more examples.
but veeramani group and other people are targeting brahmins only pl think over
ji periar had targeted only brahmins those days.... but all the social evils like heavy dowry killings in case of intercaste marriages killing of old people to inherit properties child marriages high superstition cultures like breaking of coconuts on ones heads narabali etc DO PREVAIL not in BRAHMIN COMMUNITIES but only in other communities pl remember
ReplyDeleteagain the so called backward most backward class people like vanniars nadars gounders etc do not give up reservation facility to their caste people who are really poor..
the same thing applies to sc people...
i can quote more examples.
but veeramani group and other people are targeting brahmins only pl think over