கபாலி...கபாலிடா...
Kabali - The Gangster
Cast & Crew
Director : Ranjith Pa
Producer : Kalaipuli S Thanu
Music Director : Santhosh Narayanan
Rajinikanth, Winston Chao, Radhika Apte, John Vijay, Dhansika,
Dinesh Ravi, Kishore, Kalaiyarasan, Riythvika, Nandakumar
கதை :
ஒரு கேங்ஸ்டர் கதை. கதைக்களம் ஒரு பெரிய நாடு, அதாவது மலேசியா (என்னென்னவோ ஊர் பெயரெல்லாம் சொல்றாங்க, படத்துல)
அங்கே நடக்கிற கேங்வார் - Gang War. நடுத்தர வயது கேங்ஸ்டர் கபாலி ரிலீஸ் ஆகிறார் சிறையில் இருந்து. 25 வருஷமா மனசுல ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்து பழி வாங்குறார். ஒரே துப்பாக்கி சத்தம். அதற்கிடையில், சமூக சீர்திருத்தம், லெட்சர், அந்த லெட்சரைக் கேட்டு தேவையில்லாத கோபம், அழுகை போன்ற முகபாவனைகளைக் காட்டும் இளைஞர்கள். பழிவாங்கல். மனைவியை பெண்ணைத் தொலைத்துவிட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பயணம், அதுக்கு மதுரை, பாண்டிசேரி என்று சுத்தல், இடையில் சென்னையின் செட்டியார் பங்களா(?), கடைசியில் பழிவாங்கல், கிளைமாக்ஸ்ஸுக்கு என்றே அமைக்கப்பட்ட, வாடகைக்கு எடுக்கப்பட்ட, ஒரு உயரமான Roof Top Restaurant, உட்கார்ந்த இடத்திலேயே வில்லனின் அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்துதல், போலீஸ் ரெய்டு பண்ணுதல் என்று ஏகப்பட்ட காமெடி சீன்கள், கடைசியில் இரண்டு கேங் லேயும் கொஞ்சம் நல்லவனாயிருக்கிற கபாலி கேங் வெற்றிவாகை சூடல்.
இவ்வளவுதான் கதை.
தமிழில்தான் படம் பார்த்தேன். இருந்தும் தமிழ்மாறன் சூழ்ச்சி செய்தான் என்பதும் இன்னும் சில விஷயங்களும் விக்கிபிடியாவில் படித்துதான் தெரிந்துக்கொண்டேன். போகிற போக்கில் இருக்கிறது காட்சிகள் எல்லாம். நாம எப்படி அதையெல்லாம் சேர்த்து கதையை, கதை ட்விஸ்ட்டை வொர்க்அவுட் பன்னுவோம்ன்னு எதிர்ப்பார்த்தாங்கன்னு புரியல.
அவசர கோலமாய் அள்ளித் தெளிக்கப்பட்ட ஆங்கில நாவலின் தழுவலோ என்கிற சந்தேகம் வருகிறது. .
இந்த கதைக்கு, ரஜினி வேணுமா வேண்டாமான்னு யோசித்து, இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. ரஜினி இல்லாத கபாலி
2. ரஜினிதான் கபாலி
முதலில் ரஜினி இல்லாமல் :
'ஆரண்ய காண்டம்' ன்னு 2012 ல வெளிவந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். இதே போன்றதொரு கதைக்களத்தைக் கொண்டது. இயக்குனர் குமாரராஜாவின் முதல் படைப்பு. ஆனால் அவ்வாறு சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. அதுவே பரவாயில்லை என்று ஆக்கிவிட்டது இந்த 'கபாலி' கதை.
சும்மா சும்மா எல்லோரும் ஒரே ஹோட்டல் மீட்டிங் ஹாலிலேயே கூடி கூடி பேசுறாங்க. செத்தது, சாகாதது என்று சாப்பாடு பதார்த்தம் ஏகப்பட்டது மேஜை மீது. அந்த காட்சிகளின் பின்புலத்தில் ஆணும் பெண்ணும், புகை மண்டலமும், சரக்கு பாட்டில்களும். முன்பெல்லாம் ஏதோ ஒரு சில காட்சிகளில் இப்படி வரும். இதில் படமே கிளப்புக்குள்தான் இருக்கிறது.
படம் தொடங்கும்போது, பெரிய பெரிய செயினு, விதவிதமான ஹேர் ஸ்டைல் வச்சுகிட்டு பத்து பதினைந்து இளம்வில்லன்களை அறிமுகப்படுத்துறாங்க. ஆஹா... நல்ல கலர்புல்லா இருக்கேன்னு பார்த்தால், அந்த ஒரு சீனுக்கு அப்புறம் இன்னொரு சீன்ல வராங்க. அவ்வளவுதான். அதுக்கப்புறம் ஒருத்தரையும் காணோம். இவங்க எல்லாம் பத்தாதுன்னு, குழப்புறதுக்குன்னு சென்னையில ஒரு கேங்.
தமிழ்நேசன்னு நாசர் வராரு. நாசரா அப்படின்னு நாம நிமிர்ந்து உட்காறதுக்குள்ளே அவரை காரிலேயே கொன்னு கதையை முடிச்சுட்டாங்க. இப்படிதாங்க படம் முழுக்க யாரையும் நாம முழுசா பார்க்கவே முடியாது. ஒரு குடும்பம் மட்டும் படம் முழுக்க அங்கேயும் இங்கேயும் ஓடுது, அது ஹீரோ கபாலியின் குடும்பம். இன்னொருத்தரும் அதுக்கு பின்னாடியே ஓடுறார், ஜான் விஜய்.
இன்னுமொரு சந்தேகம், எண்பதுகளில் இளைஞர்கள் எல்லோரும் இந்த மாதிரி சட்டைதான் போட்டிருந்தாங்கன்னு யார் இவங்களுக்கு எல்லாம் சொன்னா. அந்த காலத்து படத்துலே காமிச்சத்தை அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க. எல்லா படங்களிலுமே இப்படிதான் காண்பிக்கிறார்கள். நாங்களும் அந்த காலத்துலதான் படித்தோம். கிராப், கிருதா எல்லாம் ஓகே. ஆனால் பெரிய படம் போட்ட சட்டையெல்லாம் எல்லோரும் போட்டதில்லை. ஒரு பேஷன் இருந்தது என்றால், அதையே அந்த கால கட்டத்திற்கு சீல் குத்துவதா?..மாத்துங்க இந்த டிரெண்டை.
இப்படியொரு கதைக்கு ரஜினி என்னும் மெகா ஸ்டார் தேவையே இல்லை.
இப்படியொரு கதைக்கு ரஜினி என்னும் மெகா ஸ்டார் தேவையே இல்லை.
இப்போ கதையில் ரஜினியோட :
முதலில் இந்த மாதிரி வயசான கேங்ஸ்டராக நடிக்க ரஜினி ஒத்துக்கொண்டதைப் பாராட்டலாம். அவருக்கு பர்சனல் ஆக ஒரு ஆசை இருந்திருக்கலாம். அது நிறைவேறிவிட்டது. எனக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்திருக்கிறது. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர்தான் சரியில்லாமல் போய்விட்டார்.
ரஜினி இதில், மிக கூலாக நடித்திருக்கிறார். எதிரிகளிடம் கோபம் காட்டுவதாகட்டும், மனைவியின் இழப்பை நினைத்து வருந்துவதாகட்டும், யாரோ ஒரு பெண் அப்பா எனும்போதும், தன் பெண்ணே அப்பா என்று திடீரென்று வந்து நிற்கும்போது ஆகட்டும், முகம் பாவனைகளை காட்டுகிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் அவரால் சொல்லப்படும் 'மகிழ்ச்சி' என்னும் சொல், மாற்றத்தை உணர்வளவில் காட்டுகிறது.
நிறைய காட்சிகளில் ரொம்ப கேஷுவலாக நடித்திருக்கிறார். மனைவியைத் தேடிப்போகும் சமயம் ஹோட்டல் அறையில் மகளின் பதைபதைப்பை பார்த்து சிரிக்கும் தகப்பனாய், மனைவியை சந்தித்த பிறகு ஒரு கணவனாய், நடித்தல் மாதிரி இல்லாமல், மனதோடு சேர்த்து உடல் முழுவதுமே ரிலாக்ஸ் ஆனது போல் காட்சி தருகிறார். நமக்கும் ரசிக்க முடிகிறது.
ஆனால், அதே மாதிரியே கடைசி காட்சியிலும் சுகமாக ஒரு சோபாவுக்குள் அமிழ்ந்து உட்கார்ந்துக்கொள்வது, கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது.
ஒரு காட்சியில் சரக்குன்னா மலேஷியாவில் என்ன, தமிழ்நாட்டில் என்னன்னு சொல்வது சற்று அவரின் வயதுக்கும் காட்சிக்கும் ஒட்டாத ஒன்றாய் தோன்றுகிறது.
அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்லியே ஆகணும்.
ஜான் விஜய் உண்மையிலேயே அசத்தல். ஆனால், ஒரு கொடுமையான டோப்பாவுடன் தொளதொள சட்டையுடன் இளமைகாலத்தில் காட்டப்பட்டதை விட நடுத்தர வயதில் அழகாய் காட்டப்பட்டிருக்கிறார். இதுக்கும் அந்த போலியான 80s சினிமா Dressing Culture தான் காரணம்.
ரஜினியின் மனைவியாக நடிக்கும் ராதிகா அப்தே. மனைவி என்றால் சிறு உருட்டல்கள் இருக்கும், ஒத்துக்கொள்கிறேன். அதுவும் திருமணமாகி வயிற்றில் பிள்ளை சுமக்கும் வரை இருக்கும் காலகட்டம் மிக குறைவு. அதற்குள் பேசப்படும் வசனங்கள் எல்லாம் மிரட்டும் தொனியிலேயே அமைந்திருக்கிறது. இது மிகவும் செயற்கையாக இருக்கிறது. டப்பிங் பண்ணும்போது, இதை கவனித்திருக்கவேண்டும். இதனாலேயே இவர் மனதில் நிற்காமல் போகிறார்.
ஜான் விஜய்க்கு அப்புறம் கிஷோர் ஓகே. வில்லன் வின்ஸ்டன் ஓகே. படத்தில் 'உள்ளேன் அய்யா' சொன்ன எல்லோரும் ஓகே.
படத்தில் இளைஞர்கள் :
மகளாய் நடித்திருக்கும், தன்சிகா. போட்டிருந்த உடையும், அதற்கேற்ற நடை மற்றும் பாவனைகளும் ஓகே. ரஜினியிடம் பேசும் வசனங்களில் அதிகமான 'அப்பா' என்னும் சொல்லின் உபயோகத்தைக் குறைத்திருக்கலாம். வருடங்கள் கழித்துப் பார்க்கும் பெண் இவ்வளவு சகஜ நிலைக்கு வரமாட்டாள் என்பதையும் டைரக்டர் இந்த இடத்தில் கோட்டைவிட்டிருக்கிறார்.
அப்பா என்று கூப்பிட்டு கொண்டுவரும் பெண், டைகர் என்று வரும் பையனும் எல்லோருமே ஏதோ பெரிய இடத்து பிள்ளைகள் போலவே நடித்திருக்கின்றனர். யாரும் நிஜ வாழ்க்கைக்குள் இருக்கிறவர்கள் போலவே இல்லை. ஒருவேளை மலேஷியாவில் (!) அப்படிதான் இருப்பார்களோ என்னவோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கும் கூட. கலையரசன், நந்தகுமார் இவர்கள் இருவரும் பாஸ் மார்க் வாங்கிட்டாங்க.
இதில் தினேஷ் நடிப்பை சொல்லியாக வேண்டும். கொஞ்சம் கண்ணில் பேச, முகத்தில் உணர்வுகளைக் காட்ட என்று முன்னேறியிருக்கிறார். பிராமிசிங் ஆக்டர்.
பாடல்கள் :
"வீரா..துரந்தரா.." பாடலின் இசை பாகுபலியோட காப்பி மாதிரி இருக்கு..
"நெருப்புடா..." பாடல் ஓகே.
"மாய நதி .." பாடல் மட்டுமே நல்லாயிருக்கு. என்ன ஏதுன்னே புரியாம ஓடுற படத்துல ஒரு இரண்டு நிமிஷம் நம்மை உள்ளே இழுக்கிற வித்தை செய்திருக்கு இந்த பாடல். இப்படியே நீடிக்காதா என்று கூட நினைக்க வைக்கிறது.
கிட்டத்தட்ட 'நல்லவனுக்கு நல்லவனில்' வரும் "உன்னைத்தானே தஞ்சமென்று.." என்னும் பாடலை கொஞ்சமாய் நெருங்குது. இருந்தும் காட்சிதான் பாடலைவிட அதிகமாய் கண்முன் வருது. பாடல் முதலில் வந்து, காட்சி கண்முன் விரியணும். அதுதான் ஒரு பாட்டை நெஞ்சில் நிறுத்தும்.
இனி அலசல் :
முதல் சீனுக்கும், அதாவது டிரைலரில் ஓட்டிய படத்திற்கும், மீதி நாம் தியேட்டரில் பார்க்கும் படத்துக்கும் ஒட்டாத ஒரு நிலையே இருந்தது. அதில் காண்பித்த ரஜினியின் கதாபாத்திரம் அடுத்தடுத்த காட்சிகளில் மலேஷியாவாசியாகி, சடையர்கள், ஆண்டைகள், ரப்பர் தோட்டம், யூனியன் என்று வேறு மாதிரி மாறிப்போகிறது. சும்மா சும்மா மேலே போட்டிருக்கும் கோட் பற்றியே வசனங்கள் வருவது சற்று எரிச்சலாகவே இருக்கு. இடையிடையே பேசும் காந்தி, அம்பேத்கர், அம்பேத்கரின் கோட்டுக்குள்ளே நிறைய விஷயம் இருக்கு போன்ற வசனங்கள் புரியவேயில்லை. விளக்கப்பட்டிருக்க வேண்டும். ரஞ்சித்துக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்.
Native, Sarcastic, Slang Languages has to be understand by the main viewing people. That he missed.
ஏகப்பட்ட ரத்தம் கொட்டியிருக்கிறார்கள் படம் முழுவதும். ஓன்று துப்பாக்கி இல்லையென்றால் வாள். மால்களில் உள்ள ஸ்க்ரீனில் படம் பார்க்க இரவு ஆட்டத்திற்கும் ஏகப்பட்ட குழந்தைகள். முடிந்தவரை நல்ல விஷயங்களைக் காண்பிக்க பாருங்களேன். விஷுவலாக நாம் பார்க்கும் விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டு அகலாது.
ரஜினி என்னும் உயரத்தில் இருக்கும் ஒரு கலைஞனை பார்க்க சமூகத்தின் எல்லா நிலைகளில் இருந்தும் ரசிகர்களாக இருப்பவர்களும் இல்லாதவர்களும் வருவார்கள். அவருக்கு உண்டான கதையை அவருக்கு கொடுங்க. இந்த வயதான டிராகன் ரிடர்ன்ஸ் கதை கூட நல்லாதான் இருக்கு. படம் முழுக்க ரஜினிக்கு முன்னே பின்னே ஆட்கள், கார்கள், பெரிய ஹோட்டல் ரூம்கள் எல்லாம் போட்டு அசத்திட்டீங்கதான். ஆனால் கதையில் அழுத்தமில்லை. இரண்டரை மணி நேரத்துக்குள் அடைபடவில்லை. அதை சொன்னவிதமும் எடுபடவில்லை. ஏதோ ரஜினிக்கு ரத, கஜ படைகளை கொடுத்து அவரை மரியாதையாய் படம் எடுத்திருக்கேன்னு ரஞ்சித் சொல்றமாதிரியே இருக்கு.
படம் எடுக்கப்பட்ட இடம், சூழல், பிரச்சனை இவை எவற்றையுமே அவர்கள் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லவேயில்லையே. சொல்லியிருக்கலாம். நாமும் அதை நல்லவிதமாக ரசிகர்கள் என்பதை கடந்து படத்தை வரவேற்றிருப்போம். அந்த மலேசிய தமிழர்களின் பிரச்சனை என்னவென்பதை பத்திரிகைகள் மூலம் சொல்லியிருக்கலாம். ஒரு விமானத்தை பெயிண்ட் அடிக்க நேரம் இருந்திருக்கிறது. வேண்டாத பேட்டி எல்லாம் கொடுக்கமுடிந்திருக்கிறது. இதை தெளிவாக சொல்லியிருந்தால், கதையில் அழுத்தம் இல்லாவிட்டாலும் ரஞ்சித் முயற்சித்தார், ரஜினியை வைத்து எடுத்ததால், பூசி மழுப்பி கதையில் அழுத்தம் கொடுக்கவில்லைன்னாவாது நாம் சமாதானப்பட்டிருப்போமே.
மெகா ஸ்டார்களை வைத்து படம் எடுக்கும் போது, அவங்களுக்குன்னு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். ஆயிரமாயிரம் ரசிகர்கள், இன்னும் கட் அவுட்டுக்கு பால் ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் நம்ம ஊரில். ஏசி ரூமுக்குள்ளே வேலைப்பார்க்கிற சாப்ட்வேர் பசங்களும் மனசுக்குள்ளே கட் அவுட்க்கு பால் ஊத்துறவங்கதான். அறிவுஜீவிகளும் பால் ஊத்தாட்டியும் ஒரு எதிர்ப்பார்ப்பு சுமந்துதான் படம் பார்க்கப்போவார்கள். படமும் அப்படி ஒண்ணும் வித்தியாசமான சமூக சீர்திருத்தம் / மறைக்கப்பட்ட சமூக வன்முறைகள் / பெண் முன்னேற்றம் / குழந்தைகளுக்கான வழிகாட்டி இப்படி எந்த கருத்தையும் போதிக்கவும் இல்லை. இதையெல்லாம் ஏன் ரஞ்சித் கூட்டி கழிச்சு பார்க்கலை?
கபாலி மொத்தமாய் எட்டு நாட்களில் 262 கோடி சம்பாதித்து உள்ளது, பாகுபலியை விட குறைவாக என்று கணக்கு சொல்கிறது. இந்த படம் இதற்கு தகுதிபட்டதா என்னும் கேள்விக்கு இல்லை என்பதே பதில். நிச்சயமாய், ரஞ்சித்தோ ரஜினியோ இதற்காக 'மகிழ்ச்சி' என்று சொல்ல முடியாது. கலைபுலி தாணு வேண்டுமானால் ஒன்றுமில்லாத கதைக்கு கொட்டிய காசுக்கு அதிகமாக சம்பாதித்த குற்றஉணர்வு இல்லாமல் இருக்கலாம்.
இதுக்கு sequel வேற வரபோவதாக தாணு சொல்லியிருக்கார். நோ சான்ஸ்.. இனி ஒரு Gangster Returns எல்லாம் எங்களாலே தாங்க முடியாது.
கபாலி :
ரஜினியை முதன்முதல் ஸ்க்ரீனில் பார்த்தது, 'புவனா ஒரு கேள்விக்குறி'யில். மிகவும் பிடித்துப்போனது, தீவிர ரசிகையானது, வயது ஏற ஏற ரசிப்பு தன்மை மாறி, அலசல் ஆரம்பித்தது, மூன்று முடிச்சைவிட இளமை ஊஞ்சலாடுகிறதை சிலாகித்து விமர்சித்தது, இன்றைய சிவாஜி, லிங்கா வரை உள்வாங்கிக்கொண்டது - இவையெல்லாமே உண்டு, என்னைப்போலவே ரஜினியை ஆரம்பத்திலிருந்து பார்த்தவர்களுக்கு, ரசித்தவர்களுக்கு.
இந்த கபாலி, கிட்டத்தட்ட அவருடைய 'பைரவி'யைப் போல. கூலிக்காரனாய் இருந்து, எதிர்த்து கிளர்ந்து பின் தன் செயல்களுக்காக வெட்கப்பட்டு நல்லது செய்யும் ஒரு பாத்திரம். இரண்டுக்கும் கதைக்கூறு ஓன்று போலில்லை. ஆனால் கதாபாத்திரத்தின் அழுத்தம் அவ்வாறே. அந்த பாத்திரமும் பெரிதாய் பேசப்பட்டதில்லை. பத்தோடு பதினொன்றாய் அப்போது வந்துபோன படம்.
இந்த படத்தில் ரஞ்சித் உட்பட எல்லோருமே ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டாராகவே பார்த்திருப்பது தெரிகிறது. அதனால் படம் பார்க்கும் நாமளும் ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற உணர்வே அதிகமாய் இருக்கிறது.
டைரக்டர் ரஞ்சித்துக்கு, இம்மாதிரி படங்களை, மெகா ஸ்டார்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை படிப்பிக்கும் ஓர் அனுபவம். அதுபோலவே ரஜினிக்கும் பட்ஜெட் முக்கியமில்லை, கதையும் அதை எடுக்கும் இயக்குனரும் முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு படிப்பினை.
ரஜினியின் ஆரம்பகாலம் தொட்டே இருக்கும் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு, இந்த வயதில் ரஜினி என்பது படம் முழுவதும் பார்க்க ரசிக்க சுகமாய் இருந்தது. கண்களில் தெறிக்கும் அதே கோபம், அந்த சிரிப்பு எல்லாம் அப்படியே. வயதின் பரிணாமமாய் அவரின் சிரிப்பில் செயற்கைதன்மை குறைந்து இயல்பாய் சிரிக்கமுடிந்திருக்கிறது. அதை ரசிக்கலாம். அவ்வளவே..
நடிகர்கள் எல்லோரும் கும்பலாக நின்னு ரஜினி கூட போட்டோ ஷூட் எடுத்த படம்தான் கபாலி. வேற ஒண்ணுமில்லை.
ரொம்பச் சரியான விமர்சனம் அக்கா...
ReplyDeleteரஜினி இல்லை என்றால் படம் இல்லை...
இதில் சாதிச் சாயமும் தமிழர்களுக்கான படம் என்ற சல்சாப்புக்களும்...
ரஞ்சித்துக்கு குடை பிடிக்க ஒரு கூட்டம் வேறு....
கபாலி ரஜினி கேரியரில் அவருக்கு நல்ல படம்... ஆனால் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்...
இயக்குநர் கரு.பழனியப்பன் இது குறித்து நியூஸ் 7 சேனலில் அருமையாகப் பேசியிருப்பார்.
கபாலி குப்பையை குப்பை என்று தைரியமாக சொன்னதும், தகுதி இல்லாத படங்களுக்கு எந்த ஸ்டார் நடித்தாலும், குப்பையை குப்பை என்று தைரியமாக சொன்ன உங்கள் விமர்சனதிற்கு நன்றி!
ReplyDeleteஅருமையான விமர்சனம். வாழ்த்துகள்.
ReplyDeleteஇருவேறு நிலைகளில், நல்ல விமர்சனம்.
ReplyDelete